Aran Sei

‘பாலியல் கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக மட்டுமே இருக்க வேண்டும்’ – கரூர் பள்ளி மாணவி கடிதம்

ரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது பள்ளி மாணவி பாலியல் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய காவலர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை என்னும் தகவல் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்மீது வெங்கமேடு காவல் நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாய சட்டங்கள் வாபஸ் – ஆசிரியர், மாணவர் அமைப்புகள் வரவேற்பு

கடிதம், செல்போன் உள்ளிட்டவைகளை வெங்கமேடு காவலர்கள் கைப்பற்றி  தகவலை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளியில் மாணவி பயின்று வருவதால் பள்ளி ஆசிரியர், மாணவர், தலைமையாசிரியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவுசெய்துள்ளனர்.

பள்ளி மாணவி எழுதியுள்ள தற்கொலை குறிப்பில், “Sexual Harassment -ஆல சாகுற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும். என்னை யாரு இந்த முடிவை எடுக்கவெச்சான்னு சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில வாழ ஆசைப்பட்டேன். இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு ஜென்மத்துல இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணனும்னு ஆசை. ஆனா முடியாதில்ல.

‘விவசாயிகளுக்கு எதிரான சட்டம் முறியடிக்கப்பட்டு; சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது’ – சோனியா காந்தி

I love you Amma, Chithappa, mama, ammu உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா நான் உங்ககிட்ட சொல்லாமப் போறேன். இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. sorry. என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: thandi

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்