Aran Sei

‘எனக்கு ஓய்வு தேவை நான் விலகுகிறேன்’ : அரசியல் களத்தில் இருந்து விடைபெற்ற பிரஷாந்த் கிஷோர்

”நான் சிறிது ஒய்வெடுத்து கொண்டு வாழ்க்கையில் வேறு ஏதேனும் செய்ய நினைக்கிறேன். நான் இந்த இடத்தில் இருந்தே விலக விரும்புகிறேன்” என்று தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு (IPAC) என்ற பெயரில், தேர்தல் பிரச்சாரங்கள்குறித்த ஆலோசனைகள் தரும் நிறுவனத்தின் தலைவராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிறுவனம், 2011 ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடிக்கு பிரச்சார வேலைகளைச் செய்துக்கொடுத்தது. அதைத்தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜகாவின் தேர்தல் பிரச்சாரங்களை முழுமையாக பொறுப்பெடுத்து நடத்திக்கொடுத்து, அக்கட்சி வெற்றி பெற குறிப்பிடத் தகுந்த அளவிற்கும் உதவியது.

“ஆக்கப்பூர்வமற்று வீராப்பாக பேசும் மோடி” – கொரோனா நடவடிக்கை குறித்து பிரஷாந்த் கிஷோர் விமர்சனம்

மேலும் பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி போன்றோரின் வெற்றிக்கும், பிரசாந்த் கிஷோர் வேலை பார்த்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியடையும் – பிரஷாந்த் கிஷோர் சவால்

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்காகவும் (திரிணாமூல் காங்கிரஸ்), தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்காகவும் (திமுக) அவர் தேர்தல் ஆலோசகராக பணியாற்றினார்.

நிதீஷ் குமார் – பாஜகவின் “நியமன” முதல்வர் : எதிர்க்கட்சிகள் குத்தல்

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று நிலையில், பிரசாந்த கிஷோர் தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய இரண்டு கட்சிகளும் முன்னிலை வகித்து வரும் சூழலில், இனி தேர்தல் ஆலோசகராக பணியாற்றப் போவதில்லை என பிரசாந்த் கிஷோர் என்டிடிவி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கும் இடது ஜனநாயக முன்னணி – முதல்முறையாக தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று சாதனை

”நான் செய்து கொண்டிருக்கும் வேலையைத் தொடர விரும்பவில்லை. நான் போதுமானவற்றை செய்து விட்டேன். நான் சிறிது ஒய்வெடுத்து கொண்டு வாழ்க்கையில் வேறு ஏதேனும் செய்ய நினைக்கிறேன். நான் இந்த இடத்தில் இருந்தே விலக விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜகவுக்கு தொடர்ந்து பின்னடைவு – திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் முன்னிலை

”ஒரு வேளை அரசியலில் களமிறங்கும் திட்டமுள்ளதா?” என்று நெறியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி. நான் திரும்பிச் சென்று, என்னால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அவர் தேர்தல் ஆலோசகராக செயல்படுவதில் இருந்து விலகினாலும், ஐபேக் நிறுவனம் அதன் வேலையைத் திறம்பட செய்யும் எனவும் தெரிவித்தார்.

தமிழகத் தேர்தல் – தபால் வாக்கு எண்ணிக்கை: திமுக முன்னிலை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஷாந்த் கிஷோர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரட்டை இலக்க இடங்களைப் பெறுவதற்கே பாஜக கஷ்டப்படும் என்றும் ஒருவேளை பாஜக அதிக இடங்களைப் பெற்றால், நான் இந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுகிறேன் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்