Aran Sei

‘மியன்மருக்காக பிரார்த்திக்கிறேன்’ – அழகின் மேடையில் அறத்தின் குரல்

மியன்மர் நாட்டைச் சார்ந்த பிரபஞ்ச அழகிப்போட்டியின் போட்டியாளர் துஷார் வின்ட் லிவின் தனது அலங்கார அணிவகுப்பின்போது, “மியன்மருக்காக பிரார்த்திக்கிறேன்” என்ற பதாகை கையில் ஏந்தி பங்கேற்றுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 1 அன்று, மியன்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கைபற்றியதிலிருந்து அங்கு அதற்கெதிராக மக்கள் போராடி வருகின்றனர். மேலும் எண்ணற்றோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

இதுவரை குறைந்தபட்சம் 790 பேர் மியன்மார் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 4000 பேர் வரை தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மியன்மரிலிருந்து பிரபஞ்ச அழகி போட்டிக்குத் தேர்வான துஷார் வின்ட் லிவின், அலங்கார அணிவகுப்பின் போது அவரது நாட்டின் பராம்பரிய உடையை அணிந்து, மியன்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக பதாகை கையில் ஏந்தி பங்கேற்றுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

இதுகுறித்துத் தெரிவித்துள்ள துஷார் லிவின், “எல்லோரும் மியன்மர் குறித்து பேச வேண்டும் என்பதற்காகவே இந்த வேண்டுகோளை வைக்கிறேன். ராணுவ ஆட்சி நடக்கும் நாட்டிலிருந்து ஒரு பிரபஞ்ச அழகி; என்னால் பேச முடிந்த அளவு குரல் கொடுத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்