Aran Sei

எனக்கு உரிய பாதுகாப்பளிக்க வேண்டும் – பாஜக அமைச்சரால் பாதிக்கப்பட்ட பெண் காணொளி வெளியீடு

வேலைவாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கர்நாடக அமைச்சர் ஜார்கிஹோலி மீதான குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்திருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் அந்தப் பெண்ணுக்குரிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

‘பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு’ – பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ள காணொளியில் , அரசு தனக்கு தக்க பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் காணொளியில் , ” நானும் அமைச்சரும் உள்ள காணொளியை வைத்து என்ன செய்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது, ஏற்கனவே என் மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.” என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு: செய்தி வெளியிடுவதற்கு முன் ஆதாரங்களை சரி பாருங்கள்- ஊடகங்களை கண்டித்த பெங்களூரு நீதிமன்றம்

பெண்ணின் பெற்றோர்கள் 2 முறை தற்கொலைக்கு முயன்று உள்ளதாகவும் , தான் பலமுறை தற்கொலைக்கு முயன்று உள்ளதாகவும் இவ்வாறு அந்தப் பெண் காணொளியில் கூறியுள்ளதையும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ,அந்தக் காணொளியில், தனக்கு எந்த அரசியல் பின்புலம் இல்லையென்றும், அமைச்சர் ஜார்கிஹோலி வேலை வாங்கித்தருவதாக உறுதி அளித்ததாகவும் , தனக்குத் தகுந்த பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

பாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு

இதுகுறித்து தெரிவித்துள்ள மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஆர்.பிரமிளா நாயுடு ,  “பாதிக்கப்பட்ட பெண் ஆணையத்தை நாடினால் தக்க பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கின்றது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்