Aran Sei

பாஜக விவசாயிகளை திசை திருப்புகிறது – ராகேஷ் திகைத் குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாரதீய விவசாய சங்கம் அரசியல் கட்சியாக செயல்படும் எண்ணமில்லை என்று அச்சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் விவசாயிகள்,அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை. விவசாயிகளின் விருப்பத்திற்காக யார் உழைக்கிறார்களோ, அவர்களை விவசாயிகள் அவர்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிஎம் கேர்ஸ் நிதி அரசு நிதி இல்லை என்றால் அரசு பணத்தில் விளம்பரம் ஏன்? – ஒன்றிய அரசுக்கு எதிர்கட்சிகள் கேள்வி

உத்தரபிரதேச மாநில அரசு கரும்பிற்கான ஆதாரவிலையை உயர்த்த முடிவெடுத்திருப்பது குறித்து கூறிய ராகேஷ் திகைத் ,”பாஜக அரசு தேர்தலுக்கு முன்னதாக விவசாயிகளை திசைத்திருப்ப நினைக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது குவிண்டாலுக்கு 370 ரூபாய் வழங்குவதாகக் கூறினார்கள். ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்த பிறகு ,தற்போது விலையை உயர்த்துகிறார்கள் என்றால்,பாஜக பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பணவீக்கத்தின் காரணமாக விவசாயிகள் குவிண்டாலுக்கு 425 ரூபாய்க்கும் குறைவாகக் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”. என்றும் கூறியுள்ளார்.

மேலும், “எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட விவசாய சங்கம் வாய்பளித்துள்ளது. ஆனால், இது எவ்வாறு வேலை செய்யும் என்று தெரியவில்லை. எனக்கு வாக்கு வங்கி கணக்குகள் எல்லாம் தெரியாது. எனக்கு எந்த அரசியல் லட்சியமும் இல்லை”.என்று பாரதீய விவசாய சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத் குறிப்பிட்டுள்ளார்.

தீலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்று கைதான நாடாளுமன்ற உறுப்பினர் – காவல் பிணையில் விடுவிப்பு

அதுமட்டுமின்றி,”விவசாய சங்கம் சமூக அமைதியை வளர்க்க தளத்தை உருவாக்கித் தந்துள்ளது. முசாபார்நகர் மகாபஞ்சாயத்து கூட்டத்திற்குப் பிறகு, இஸ்லாமிய விவசாயிகள் கோவில் மணிகளை அடித்தனர். பாஜகவால் அவர்களை இதை செய்ய வைக்க முடியுமா? முசாபார்நகர் கலவரம் பாஜகவின் ஊக்குவிப்பால் நடந்தது என்பதை நாங்கள் உணர்ந்துக் கொண்டுள்ளோம்” என்றும் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

Source: THE HINDU 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்