Aran Sei

மாட்டு மூத்திரத்தை தினமும் குடிப்பதால் தான் கொரோனாவால் பாதிப்படையவில்லை: பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பெருமிதம்

credits : The Statesman

நான் தினமும் மாட்டு மூத்திரத்தை குடிக்கிறேன். அதானால் தான் தற்போது வரை, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை” என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், நேற்றைய தினம், 2,81,386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,49,65,463 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் 2,74,390 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 4106 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த சிலர், உடலில் கொரோனா நோய் எதிர்ப்புசக்தியை பெறுவதற்கும், கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வரவும், வாரம் ஒருமுறை கோசாலைகளுக்குச் (பசு பாதுகாப்பு மையம்) சென்று, தங்கள் உடல் முழுவதிலும் மாட்டுச் சாணத்தாலும் மாட்டு மூத்திரத்தினாலும் ஆன கலவையால் பூசிக் கொள்கின்றனர் என்றும், பூசிய கலவை காய்ந்த பின்னர், பால் அல்லது மோரினால் அதை கழுவிக்கொள்கின்றனர் என்றும் செய்திகள் வெளியாயின.

அரசை விமர்சித்த நிபுணர் குழு உறுப்பினர் ஷாஹித் ஜமீல் ராஜினாமா – அரசின் நிர்பந்தமே காரணம் என்று உறுப்பினகர்கள் கருத்து

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்திருந்த, இந்திய மருத்துவ கழகத்தின் தேசிய தலைவர் மருத்துவர் ஜே.ஏ.ஜெயலால், ”கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான எதிர்ப்புசக்தியை மாட்டு சாணமும் மாட்டு மூத்திரமும் வழங்குகிறது என்பதற்கு, விஞ்ஞானப்பூர்வமான நிருபணம் ஏதுமில்லை. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் நம்பிக்கைச் சார்ந்ததே” என்று தெரிவித்திருந்தார்.

‘இது ஜனநாயகமா? என்னையும் கைது செய்யுங்கள்’ – பிரதமருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர்களின் கைதை கண்டித்த ஓவியா

மேலும் ”இது போன்ற நடவடிக்கைகள் உடலுக்குப் பல்வேறு தீங்குகளை ஏற்படத்தலாம். மிருகங்களிடமிருந்து மனிதனுக்கு புதுவகையான நோய்கள் பரவும் ஆபத்தும் இருக்கிறது” என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், ”இந்திய பசுக்களின் மூத்திரத்தை குடித்தால், நுரையீரல் பாதிப்பு வெகுவாக குறையும். நான் அதை (மாட்டு மூத்திரத்தை) தினந்தோறும் குடிக்கிறேன். அதனால் தான் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை” என்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான பிரக்யா சிங் தாக்கூர், பேசும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி தந்து உதவ வேண்டும் – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வேண்டுகோள் 

பாஜக தலைவர்கள் மாட்டு மூத்திரத்தை குடிக்க கோரி வலியுறுத்துவது முதல்முறை அல்ல, கடந்த ஆண்டு மேற்கு வங்க பாஜகவின் மாநில தலைவர் திலிப் கோஷ், ”இது இந்தியா, இது கிருஷ்ணரின் மண். இங்குப் பசுக்கள் தெய்வம். அவை வணங்கப்படும். நாங்கள் ஆரோக்கியத்துடன் வாழ மாட்டு மூத்திரத்தை குடிப்போம்” என்று கூறியதும் உத்தரபிரதேசத்தின் பய்ரியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான சுரேந்திர சிங், கொரோனா நோயிலிருந்து குணமாக மாட்டு மூத்திரம் குடிக்க வேண்டும் என்று கூறி அதைக் குடித்து காட்டியதும் குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்