கர்நாடகவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து முஸ்கான் கான் என்ற மாணவி வந்திருந்ததை அடுத்து அவரை சுற்றியிருந்த காவி துண்டு அணிந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டனர். அதற்கு “எதிர்வினையாகவும், என்னை தெரியப்படுத்திக் கொள்வதற்காகவும் தான் அல்லாஹு அக்பர் முழக்கமிட்டேனே தவிர, அவர்களைப் புண்படுத்துவதற்காக அல்ல” என்று மாணவி முஸ்கான் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி, ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை ஆடைக் கட்டுப்பாடு விதியைக் காரணம் காட்டி வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கர்நாடகா முழுவதும் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று காவி துண்டு அணிந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
‘உடுப்பி அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை’ – இஸ்லாமிய மாணவிகள் உரிமைக்குரல்
ஹிஜாப் தடையை எதிர்த்தது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஹிஜாப் சம்பந்தமாகத் தீர்ப்பு வழங்கப்படாத வரை கல்வி நிறுவனங்களில் மத ரீதியான ஆடை அணியக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
முஸ்கான் கான் தனது 7-8 வயதிலிருந்தே ஹிஜாப் அணிந்து வந்துள்ளதாகவும், நான் எந்த வகுப்புவாத செயலையும் செய்யவில்லை என்று முஸ்கான் தி வயரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது,
“அன்றைய தினம் நான் கல்லூரிக்குச் சென்றபோது, பல ஆண்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு, நான் கல்லூரிக்கு உள்ளே செல்ல விரும்பினால், என் ஹிஜாபைக் கழற்ற வேண்டும் என்றும் ‘இங்கே படிக்க வேண்டுமென்றால் ஹிஜாபைக் கழற்றிவிடு, இல்லையென்றால் வீட்டுக்குப் போ’ என்று கூறினார்கள்.”
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வர எதிர்ப்பு: காவி துண்டுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்
“நான் அவர்களை எல்லாம் புறக்கணித்து, வாயிலுக்குள் நுழைந்து என் பைக்கை நிறுத்தினேன். ஆனாலும், அவர்கள் என் அருகில் வந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டு மீண்டும் மீண்டும் என் ஹிஜாபை அங்கேயே கழற்றச் சொன்னார்கள். நான் மிகவும் கோபமடைந்தேன்.”இதன் பிறகு நான் சிறிதும் பயப்படவில்லை. நான் என் உரிமைக்காக நின்றேன்” என்று முஸ்கான் கான் தெரிவித்துள்ளார்.
“ஹிஜாப் எனது முதல் முன்னுரிமை . ஹிஜாப் அணிய என்னை யாரும் வற்புறுத்தவில்லை. இது எனது உரிமை, எனது கண்ணியம், எனது மரியாதை. என்னால் அதை ஒருபோதும் விட்டுவிட முடியாது. நான் அதை அணியும் போது பாதுகாப்பாக உணர்கிறேன் என்று முஸ்கான் கான் தெரிவித்துள்ளார்.
ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்ட மாணவர்களின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா எனற கேள்விக்குப் பதிலளித்த முஸ்கான் அப்படி எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்க நான் விரும்பவில்லை. என் சகோதரர்களான அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், ஆனால் நாளை அவர்கள் மீண்டும் உணர்ந்து சரியான பாதைக்குத் திரும்புவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று முஸ்கான் கான் கூறியுள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.