Aran Sei

ஆர்.எஸ்.எஸ் குறித்து எனது தந்தை விஜேந்திர பிரசாத் எழுதியிருக்கும் கதையை படிக்கும் பொது நான் பல முறை அழுதேன் – இயக்குநர் ராஜமெளலி

ர்.எஸ்.எஸ் குறித்து எனது தந்தை விஜேந்திர பிரசாத் எழுதியிருக்கும் கதையை படிக்கும் பொது நான் பல முறை அழுதேன் என்று பிரபல இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஜமெளலி, “எனக்கு ஆர்எஸ்எஸ் பற்றி அதிகம் தெரியாது. நான் அந்த அமைப்பை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அது எப்படி உருவானது? அவர்களின் நம்பிக்கைகள் என்ன ? அவர்கள் எவ்வாறு வளர்ந்தார்கள் உள்ளிட்ட எவையும் எனக்குத்தெரியாது. ஆனால் நான் எனது தந்தை ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதிய அந்தக்கதையை படித்தேன். அது உண்மையில் அவ்வளவு உணர்ச்சிகரமானதாக இருந்தது.

அந்தக்கதையை நான் படிக்கும் போது பல முறை அழுதேன். அந்தக்கதையில் உள்ள ட்ராமா என்னை அழ வைத்தது. ஆனால் ‘அதற்கும் நிஜ வரலாற்றுப் பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை’. அது மிக மிக நல்ல கதை. ஆனால் அது சமூகத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என் தந்தை எழுதிய கதையை நான் இயக்குவேனா? என்று நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

முதலாவதாக, இது சாத்தியமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எனது தந்தை இந்தக்கதையை வேறு ஏதேனும் அமைப்புக்காகவோ, நபர்களுக்காகவோ அல்லது தயாரிப்பாளருக்காகவோ எழுதியிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை.

அந்தக்கேள்விக்கு, என்னிடம் திட்டவட்டமான பதில் இல்லை. அந்தக்கதையை நான் இயக்கினால் உண்மையில் பெருமையடைவேன். காரணம், அந்தக்கதை அழகான, மனிதம் மற்றும் உணர்ச்சிகளை உள்ளடக்கியது என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

Source : india today

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்