ஸ்டெர்லைட் உருக்காலை 1 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அதைவிட 10 மடங்கு வாயு ஆக்சிஜனை (GOX) காற்றில் கலக்கவிடுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக தி வயர் சயின்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த 7 நாட்களில் 150 டன் திரவ ஆக்சிஜென் உற்பத்தி செய்த ஸ்டெர்லைட் உருக்காலை கிட்டத்தட்ட 1500 டன் வாயு ஆக்சிஜனை காற்றில் கலக்கவிட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
ஸ்டெர்லைட் உருக்காலை உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் குறித்து தெரிவித்துள்ள வல்லுநர்கள், ஸ்டெர்லைட் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மிகுந்த பொருட்செலவு கொண்டதாகவும், பயனற்றதாகவும், பரந்துபட்ட அளவில் வழங்க முடியாததாக உள்ளதாகவும் உள்ளது. இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறைக்காக உற்பத்தி செய்யப்படுகிறது என்பது மட்டுமல்லாமல் அதிகளவிலான வளங்களும் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக தி வயர் சயின்ஸ் செய்தியில் கூறியுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டம்: ‘வழக்குகள் வாபஸ்; கைதான 93 நபர்களுக்கு நிவாரணம்’ – தமிழக அரசு அறிவிப்பு
மேலும், இவ்வளவு பொருட்செலவில், ஏன் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய வல்லுநர்கள், அதற்கு பதிலாக குறைந்த செலவில் நிலையான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை, ஊரகப் பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் குழாய்களின் வழியாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள சென்னை ஐ.ஐ.டியின் வேதிப்பொறியியல் துரையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸ்வாமிநாதன், “வேதாந்தா ஏன் இத்தகைய வீணான முயற்சியில் ஈடுபட விரும்புகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளதாகவும் தி வயர் சயின்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.