இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மகள் வாமிகா கோலிக்கு ஆன்லைன் மூலமாக அடையாளம் காண முடியாத நபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து என அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியிருந்த நிலையில் இந்த மிரட்டல்கள் வந்திருந்தன. இந்தத் தொடரில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தியிருந்தார் கோலி
வாமிகா, பிறந்து ஒன்பது மாதம் மட்டுமே ஆகியுள்ள குழந்தை. இந்த நிலையில் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தேசிய மகளிர் ஆணையமும் இது தொடர்பாக விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
மும்பை காவல்துறையினர் அது தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர். அதில் ஹைதராபாத் நகரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ராம்நாகேஷ் ஸ்ரீனிவாஸ் அக்குபதினி என்ற 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது ட்விட்டர் ஹேண்டிலை பாகிஸ்தான் நாட்டு ஆதரவாளரை போல மாற்றிக் கொண்டு வாமிகா கோலிக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணைக்காக மும்பை கொண்டு செல்கின்றனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.