Aran Sei

ஐதராபாத் மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – காங்கிரஸ் பின்னடைவு, ஓவைசி 34 இடங்களில் முன்னிலை

credits : indian express

தராபாத் பெருநகர மாநகராட்சித் தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் கட்சி 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஐதராபாத்தில் மொத்தமுள்ள 150 வார்டுகளுக்கு டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 46.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பீகாரில் சரிந்த காங்கிரஸ் – கேள்விக்குள்ளாகும் ராகுல் காந்தியின் தலைமை

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்குத் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தெலங்கானாவை ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹதுல் முஸ்லிமீன் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியன போட்டியிடுகின்றன.

`மோடியை எதிர்க்கும் ஆண்மையைக் காங்கிரஸ் இழந்துவிட்டது’ – அசாதுதின் ஓவைசி

இந்த மாநகராட்சித் தேர்தலுக்காகப் பாஜகவின் முன்னணித் தலைவர்களான அமித் ஷா, ஜே பி நட்டா, பிரகாஷ் ஜவேடேகர், ஸ்மிரிதி இரானி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்தப் பிரச்சாரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத் ”சிலர் என்னிடம் ஐதராபாத்தின் பெயரை மாற்ற முடியுமா எனக் கேட்கின்றனர். நான் அவர்களிடம், ஏன் மாற்ற முடியாது? பாஜக ஆட்சியமைத்த பின்னர் ஃபைசாபாத்தை அயோத்தி எனவும், அலகாபாத்தை பிரக்யாராஜ் எனவும் மாற்றினோம். ஏன் ஐதராபாத்தை பாக்யநகர் எனப் பெயர் மாற்றம் செய்யக் கூடாது? எனப் பிரச்சாரத்தின் போது கேள்வியெழுப்பினார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

credits : pti
credits : pti

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சூழலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 65 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 41 இடங்களிலும், அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹதுல் முஸ்லிமீன் கட்சி 34 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை எதிர்த்துப் போராட தயார் – அசாதுதீன் ஓவைசி

2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக மாநகராட்சி தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் தற்போதைய சூழலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

ஐதராபாத்தில் இருந்து வெளி வரும் முடிவுகள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறிப்பிடுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் மின்னனு வாக்கு இயந்திரம் பயன்படுத்தபடவில்லை, வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்