Aran Sei

பீகாரில் ஆம்புலன்ஸை மறுத்த மருத்துவமனை – இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற கணவர்

பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் இறந்து போன தனது மனைவியின் சடலத்தை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததால் மனைவியின் உடலைத் தனது தோளில் தூக்கிக்கொண்டு தகனம் செய்வதற்காகத் தனது கிராமத்தை நோக்கி அவரின் கணவர் கிருஷ்ணகுமார் நடந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

வைஷாலி மாவட்டம் ராம்தௌலி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார், தனது மனைவியைச் சிகிச்சைக்காக ஹாஜிபூர் சதார் மருத்துவமனைக்கு ஜனவரி 20 அன்று அழைத்து வந்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்த மருத்துவர்கள் அவரது மனைவியைப் பரிசோதித்துவிட்டு அவள் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதன்பின் கிருஷ்ண குமார், இறந்துபோன தனது மனைவியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தரவில்லை.

“நான் ஒரு மணி நேரம் காத்திருந்தேன், ஆனால் மருத்துவ ஊழியர்கள் யாரும் எனக்கு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து தரவில்லை. என்னிடம் போதுமான பணமும் இல்லாததால், என் மனைவியின் சடலத்தைத் தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறினேன்,” என்று கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

அனைத்து மதங்களும் அமைதியாக வாழும் இந்தியாவைத்தான் நேதாஜி கனவு கண்டார் – நேதாஜி மகள் கருத்து

கிருஷ்ணகுமார் தனது மனைவியின் சடலத்தைத் தோளில் தூக்கிச் சென்ற சம்பவத்தை ஒருவர் கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

“கிருஷ்ணகுமார் தனது மனைவியின் உடலைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்து சென்றபோது, ​​மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகள்,மருத்துவ ஊழியர்கள் என யாரும் தடுக்கவில்லை’ என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்