Aran Sei

கேரளத்தில் மனைவிகளைப் பரிமாற்றிக்கொள்ளும் கணவன்கள்: பாலியல் பண்டங்களா பெண்கள்? – மகளிர் ஆணையத் தலைவர் கண்டனம்

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் மற்ற ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும்படி பலமுறை வற்புறுத்தியதாக அதில் “இயற்கைக்கு மாறான உடலுறவுவும்” இருந்தது என முதலில் யூடியூப் பாட்காஸ்டிலும், பின்னர் முறையாக காவல்துறையிலும் புகார் அளித்தார்.

இந்த பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376 (பாலியல் வன்புணர்வு), 377 (இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ளச் சொல்லுதல் ) மற்றும் 506 (கொலை மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை இதுவரை 7 பேரைக் கைது செய்துள்ளர்.

கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்கள் – தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திருமணமான மற்ற பெண்களுடன் உடலுறவு கொள்வதற்காகவும், பணத்திற்காகவும், கணவர்கள் இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. 2 வருடங்களாகக் கணவனின் மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்குப் பிறகு அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதன் பிறகு நடந்த விசாரணையில் மனைவிகளை பரிமாற்றிக்கொள்ளும் வலைப்பின்னலின் ஒரு பகுதியாக கணவர்கள்  இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர், அங்குத் தம்பதிகள் தங்கள் மனைவிகளை தங்களுக்குள் ‘பரிமாற்றம்’ செய்துகொண்டனர். இந்த மனைவிகளைப் பரிமாறிக் கொள்ளும் இந்த முறையில் சிலர் விருப்பத்துடன் ஈடுபட்டனர். அதேசமயம் சிலர் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்தது.

‘பிரதமர் மோடியின் மௌனம் ஜனநாயகத்தைக் கேளிக்கூத்தாக்கிவிடும்’ – தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து ஐஎம்எஸ்டி அமைப்பு கருத்து

இந்த பெண்ணின் புகார் மற்றும் அடுத்தடுத்த கைதுகள் “சமூக ஒழுங்கை சீர்குலைக்கும்” போக்கை நமக்குக் காட்டுகின்றன. “பெண்கள் பாலியல் பண்டங்களாகப் பார்க்கப்படும் கலாச்சாரம் கவலையளிக்கிறது. இது சமூக விழுமியங்கள் சிதைவதற்கான அறிகுறியாக உள்ளது. இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்,” என்று கேரள மகளிர் ஆணையத்தின் தலைவி சதீதேவி கூறியுள்ளார்.

கேரளாவில் இதுபோன்று மனைவி மாற்றிக்கொண்டு பெண்கள் பாலியல் வன்புணர்வு  செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில், ஒரு பெண் தனது கணவர் மற்ற ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டிய புகாரில் 4 பேரைக் கேரள காவல்துறை அப்போது கைது செய்தனர்.

ஏறத்தாழ 5,000 தம்பதிகள் பல்வேறு சமூக ஊடக குழுக்களில் இருந்து திருமண ஜோடிகளை மாற்றுவதை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் இந்த இணைய குழுக்களில் எத்தனை பெண்கள் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கேரளா காவல்துறை தெரிவித்துள்ளது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்