Aran Sei

உலக பணக்காரர்களில் 8வது இடத்தில் அம்பானி – கொரோனா காலத்தில் மட்டும் 24% வளர்ச்சி

credits : patrika

கொரோனா பேரிடரால் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த நிலையில், 2020 ஆம் ஆண்டில், இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் புதிதாக 40 பேர் இணைந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆய்வுகள் மேற்கொண்டு, உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ஹுருன் நிறுவனம், 2021 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஜனவரி 15 முதல் தனிநபர் அல்லது குடும்பச் சொத்து மதிப்பு தொகுக்கப்பட்டுள்ளது.

அதில், இந்திய பணக்காரர்கள் பட்டியலில், வழக்கம் போல், முகேஷ் அம்பானி சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பெற்றுள்ளார் எனவும் உலக பணக்காரர்கள் பட்டியலில், எட்டாவது இடத்தை பிடித்துள்ள அவர், கடந்த ஆண்டு மட்டும் 24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறுகிறது.

கொரோனா நோய்த்தொற்று காலம் – சீனாவில் அதிகரித்த சூப்பர் பணக்காரர்கள்

கடந்த சில ஆண்டுகளாக அபார வளர்ச்சியைப் பெற்றுள்ள குஜராத்தைச் சேர்ந்த கவுதம் அதானி, ஒரே ஆண்டில் தன்னுடைய சொத்து மதிப்பை இரட்டிப்பாக உயர்த்தியுள்ளதாக ஹுருன் ஆய்வு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம் உயருமா? – கோடிகளில் ஊதியம் பெறும் அமெரிக்க தலைமை நிர்வாகிகள் மீது விமர்சனம்

இந்திய மதிப்பில் சுமார் இரண்டு லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ள அதானி,  உலக பணக்காரர் பட்டியலில் 20 இந்தியர்களை பின்னுக்குத் தள்ளி 48 வது இடத்தை பிடித்துள்ளார் என்றும், இந்தியாவில் அம்பானிக்கு அடுத்த இடத்தை அதானி பெற்றுள்ளார் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் தி இந்து அவருடைய சகோதரர் வினோத்தின் சொத்து, ஏழாயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் – பிஎஃப் வசதியை பயன்படுத்தி வரி தவிர்க்கும் பணக்காரர்கள்

மூன்றாவது இடத்தை, தகவல் தொழிற்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் (HCL) நிறுவனர், ஷிவ் நாடார் (19 ஆயிரம் கோடி ரூபாய்) பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுருன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை ஆராய்ச்சியாளருமான அனஸ் ரஹ்மான் ஜுனைத் “அமேரிக்கா, சீனா போன்ற நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் நிதியை உருவாக்கும் போது, இந்தியா இன்னும் பாரம்பரிய தொழில்களின் மூலமாகவே நிதியை ஈட்டுகிறது” என தெரிவித்துள்ளதாக தி இந்து கூறுகிறது.

பணக்கார விவசாயிகள், உலகளாவிய சதிகள், உள்நாட்டு முட்டாள்தனம் – பி சாய்நாத்

”இந்தியாவில் தொழிற்நுட்ப வளர்ச்சியின் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கப்பட்டால், உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேரிக்காவை பின்னுக்குத் தள்ளி அதிக இந்தியர்கள் இடம்பெறுவார்கள்” எனவும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்கேலரின் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரான ஜெய் சவுத்ரியின் சொத்து மதிப்பு, 274 சதவீதம் அதிகரித்து 9 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், பைஜு நிறுவனத்தின் தலைவர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு 100 சதவீதம் அதிகரித்து, இரண்டு ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் ஹுருன் அறிக்கை தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

அம்பானி, ஒரு மணிநேரத்தில் சம்பாதித்ததை, தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகளாகும் – ஆக்ஸ்ஃபாம்

உலக பணக்காரர்கள் பட்டியலில், இடம்பெற்றுள்ள 177 கோடீஸ்வரர்களில், 60 பேர் இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பையைச் சேர்ந்தவர்கள் என்றும், 40 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றும், 22 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்றும்  அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில், டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க், 197 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், அமேசான் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், 189 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறுகிறது.

சந்தையை தலைகீழாகப் புரட்டிப் போட்ட எலான் மஸ்க் – கண்மூடித்தனமாக முதலீடு செய்த மக்கள்

தனிநபர் மற்றும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு, கொரோனா பேரிடர் காலத்திலும் கூட அசுர வளர்ச்சி அடைந்துள்ளபோது, இந்தியாவின் பொருளாதாரம் 7  சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்