Aran Sei

‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரையுங்கள்’ – யாழ்ப்பாணத்தில் தொடங்கிய உண்ணாவிரதம்

போர் குற்றம் தொடர்பாக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று (பிப்ரவரி 28), இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு முன்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன், மதத்தலைவர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட தலைமை கிறுஸ்துவ போதகரான ஜெயரத்னம் அடிகளார் மற்றும் இந்து மத போதகரான வேலன் சுவாமிகள் இணைந்து, இப்போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர் என்று தமிழ் கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் எழுச்சிப் போராட்ட அறிக்கை – வடகிழக்கு தமிழர், முஸ்லீம்கள், மலையக தமிழர் உரிமைகள் வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையும் (UNHRC), அதில் உள்ள நாடுகளான இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மாண்டெனெக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா போன்ற நாடுகள் இணைந்து, இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்று இந்து மத போதகரான வேலன் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் கார்டியன் தெரிவித்துள்ளது.

நன்றி : தமிழ் கார்டியன்

இந்த உண்ணாவிரத போராட்டத்தை பற்றி அவர் குறுப்பிடுகையில், “இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற ஒரு நியாயமான கோரிக்கையை அகிம்சை ரீதியிலே சாத்வீக ரீதியிலே சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மாணவர்களும் இளைஞர்கள் ஆரம்பிக்கிறார்கள். இறைவனின் அருளாசி அவர்களுக்கு கிடைக்க வேண்டும். வெற்றியடைய வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “இது காலத்தின் தேவையாக இருக்கிறது. ஈழத்தமிழர்களாக நாங்கள் அனைவரும் ஒன்றுப்பட்டு, எங்களுக்குள் இருக்கக்கூடிய கட்சி, மதம் போன்ற அனைத்து பேதங்களையும் கடந்து, தமிழ்மக்கள், தமிழர்கள் என்ற அடிப்படையில், இந்த சுழற்சி முறையிலான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மதத்தலைவர்களாகிய நாங்கள் அன்போடு கோரிக்கை விடுக்கிறோம்.” என்று வேலன் சுவாமிகள் கோரியுள்ளதாக தமிழ் கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

’தமிழ் மக்களின் வாழ்வுரிமையை காக்க வேண்டும்’ : அடக்குமுறைகளை தாண்டி நிறைவடைந்த பேரணி

கடந்த மாத தொடக்கத்தில், இலங்கை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் தொடங்கி, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிகண்டி வரை, இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் (தமிழர், இஸ்லாமியர்) வாழ்வுரிமையை வலியுறுத்திய மக்கள் எழுச்சிப் பேரணி நடைபெற்றது.

அண்மையில், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரி, டொராண்டோவிலிருந்தும் மாண்ட்ரீலிலிருந்தும் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்