Aran Sei

பொதுமுடக்கத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாடு – காரணம் என்ன?

Image Credits: DNA India

ந்தியாவில், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு 6-7 மாதங்களான பிறகும் பலர் பசியிலும் பட்டினியாலும் உள்ளனர் என்று உணவுக்கான உரிமை குழு (Right to Food Campaign) கண்டறிந்துள்ளது. பலர் பல வேலைகள் உணவு உண்பதில்லை என்றும், பலரால் வருமான இழப்பின் காரணமாகச் சத்தான உணவில் செலவிட முடிவதில்லை என்றும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

11 மாநிலங்களில் விளிம்பு நிலையில் வாழும் 4000 பேர் இந்தக் கணக்கெடுப்புக்கு பதில் அளித்துள்ளனர். ஹங்கர் வாட்ச் என்று அழைக்கப்படும் இந்த ஆய்வில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தங்கள் நிலையைக் குறித்து தெரிவித்துள்ளனர். மத சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதில், 80விழுக்காட்டினர் மார்ச் மாதத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன் ரூ.7,000 க்கும் குறைவாகச் சம்பாதித்துள்ளனர்.

தொடர் வீழ்ச்சியில் இந்திய பொருளாதாரம் – கொரோனாவே காரணம் என்கிறது மத்திய அரசு

 

நவம்பர் மாதத்திற்குப் பிறகு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் (Pradhan Mantri Garib Kalyan Yojana) கீழ் இலவச தானியங்களை வழங்கும் திட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான அரசின் முடிவை இந்த ஆய்வு கேள்விக்குள்ளாகியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடுமையான குறைவு

கணக்கெடுக்கப்பட்ட மக்களில் 25 விழுக்காட்டினர்  அரிசி மற்றும் கோதுமையை உட்கொள்வது மிகவும் குறைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக் கட்டணம் – கொரோனா முடக்கத்திலும் தனியார் பள்ளிகள் பிடிவாதம்

இதேபோல், 64 விழுக்காட்டினர்  பருப்பு வகைகளின் நுகர்வு குறைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர்  பருப்பு வகைகளை உட்கொள்வது மிகவும் குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளனர். 73 விழுக்காட்டினர்  காய்கறிகளை குறைவாக உட்கொள்கிறார்கள், 40 விழுக்காட்டினரின் நுகர்வு மிகவும் குறைந்துள்ளது.

அசைவ உணவு உண்பவர்களில் 71 விழுக்காட்டினரால் முட்டை அல்லது இறைச்சியை வாங்க முடியவில்லை. 66 விழுக்காட்டினர்  கொரோனாவுக்கு முன் உட்கொண்டதை விடத் தற்போது குறைவாக உட்கொள்வதாகக் கூறியுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள் – அறிவியல் வல்லரசு என்பது பகல்கனவே

இந்த ஆய்வு முடிவை வெளியிடும்போது வேளாண் சட்டங்களுக்கும், நுகர்வில் ஏற்பட்ட குறைவுக்கும் சம்பந்தம் உண்டு என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். “விவசாயிகள் தங்களது பொருட்களுக்கான உரிய விலைகளைப் பெற வேண்டும், ஆனால் புதிய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை, எனவே விவசாயிகளிடையே பாதுகாப்பின்மை உள்ளது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்து சோதிக்கப்பட்டவருக்கு மனநலம் பாதிப்பு

உணவுக்கான உரிமை குழு, ஒவ்வொரு நபருக்கும் 10 கிலோ தானியங்கள், 1.5 கிலோ பருப்பு வகைகள் மற்றும் 800 கிராம் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 2021 ஜூன் வரை, அதாவது அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்கும் உலகளாவிய பொது விநியோக முறையைக் கோரியுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒருவருக்காவது 200 நாட்களுக்கு வேலையை உறுதி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையையும் அது முன் வைத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்