Aran Sei

போஸ்னியா அகதிகள் முகாம் : பனியில் உறையும் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள்

Image Credits: The New Humanitarian

போஸ்னியா நாட்டில் கடும் பனியும் திடீர் வெப்பநிலை குறைவும் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள எரிந்து போன கூடார முகாமில் நூற்றுக்கணக்கான அகதிகள் சிக்கி தவிக்கிறார்கள் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான வடமேற்கு போஸ்னியாவில் உள்ள லிபா முகாமில் குளிருக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போர்வைகளையும் பைகளையும் அகதிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த வாரத் தொடக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பிஹாக் நகருக்கு அருகில் உள்ள முகாமின் பெரும்பகுதி அழிந்தது. முன்னதாகவே, இந்த முகாம்களில் அகதிகளையும் புலம்பெயர்ந்தோரையும் தங்க வைப்பதற்கு போதுமான இடம் இல்லை என்று சர்வதேச இயக்கங்களும், பொதுநல குழுக்களும் கடுமையாக விமர்சித்தன.

“எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்

தீ விபத்து ஏற்பட்ட போதிலும், போஸ்னிய அதிகாரிகள் லிபாவில் உள்ள அகதிகளுக்குப் புதிய தங்குமிடங்களைக் ஏற்பாடு செய்யத் தவறிவிட்டனர். வெப்பத்தை உருவாகும் வசதிகளும் மற்ற வசதிகளும் எதுவும் இல்லாமல் சுமார் 1,000 பேர் குளிரில் சிக்கியுள்ளனர். அவர்கள் மீட்புக் குழுக்களால் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்.

“வெப்பநிலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, வெப்பத்தை கூடுவதற்கான ஏற்பாடு எதுவும் இல்லை” என்று போஸ்னியாவில் குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் பீட்டர் வான் டெர் அவுவேர்ட் ட்வீட் செய்துள்ளார். “இந்த நிலையில் யாரும் வாழக் கூடாது. இப்போது அரசியல் துணிச்சலும் நடவடிக்கையும் தேவை” என்றும் அவர் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் – பாகிஸ்தான் திரும்பும் இந்து மற்றும் சீக்கிய அகதிகள்

“நாங்கள் விலங்குகளைப் போல வாழ்கிறோம். விலங்குகள் கூட எங்களை விட நன்றாக வாழ்கின்றன!” என்று பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த காசிம் என்பவர் கூறியுள்ளார். “அவர்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டால், நாங்கள் இறந்துவிடுவோம், எனவே தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குரோஷியாவுக்குச் செல்ல, புலம்பெயர்பவர்கள் பெரும்பாலும் எல்லையில் உள்ள ஒரு மலைப் பகுதியில் சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்துகின்றனர். குரோஷிய காவல்துறையினர் தங்கள் மீது வன்முறையைப் பிரயோகித்ததாகவும் அகதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்