உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய மாஸ்கோ மற்றும் செயிண்ட் பிட்டர்ஸ்பர்க் பகுதியில், போர் எதிர்ப்பு முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த 600 பேரைத் தற்காலிக கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மாஸ்கோவில், புஷ்கின்ஸ்கயா சதுக்கத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், “போரை நிறுத்துங்கள்,” “போர் வேண்டாம்,” “உக்ரைன் நம் எதிரி அல்ல” மற்றும் “இந்த போர் யாருக்கும் தேவையில்லை” போன்ற முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போரை நிறுத்த ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – உக்ரைன் அதிபர் அறிவிப்பு
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா விதிமுறைகள் பின்பற்றிச் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.