Aran Sei

‘பழைய முறையிலேயே நெல் கொள்முதல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கடிதம்

புதிய முறையில் நெல் கொள்முதல்  செய்வதால் பல சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்வதால் பழைய முறையிலேயே நெல் கொள்முதல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு ஆன்லைன் பதிவு முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

இந்தப் புதிய முறையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யவேண்டிய நிலம் மற்றும் சாகுபடி விவரங்களை அதற்கென அளிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் ஸ்மார்ட் போன், இ-சேவை மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்கள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அனுமதி அளித்தவுடன், அந்த விவசாயியின் செல்போன் எண்ணுக்கு, நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு எப்போது கொண்டு வர வேண்டும் என குறுந்தகவல் வரும், அப்போது எடுத்துச் சென்று விற்பனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் பதிவு முறையானது விவசாயிகளுக்குப் புதியதோர் சுமையாக அமைந்துள்ளது. விவசாயிகளில் பலர் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்து வருகின்றனர். பலருக்கு நிலத்தின் பட்டா எண்கூட தெரியாது. மேலும் உதாரணத்திற்கு தந்தை பெயரில் ஒரே சர்வே எண்ணில் உள்ள நிலத்தில், அவரது 3 மகன்கள் தனித்தனியே சாகுபடி செய்யும்போது, ஆன்லைன் பதிவில் அந்த சர்வே எண்ணுக்குரிய நிலம் முழுவதுக்கும் ஒரே நேரத்தில்தான் விற்பனை செய்ய அனுமதி கிடைக்கும். இதனால், அறுவடை செய்வதில் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

மேலும், ஆன்லைன் பதிவில் சர்வே எண் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் சிறு தவறு செய்தாலும் கூட நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் பதிவு செய்ய காலதாமதம் ஏற்படும்.

உடனடியாக அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிரை ஆன்லைன் பதிவு மூலம் 2 வாரங்கள் கழித்து கொள்முதலுக்கு அனுமதி கிடைக்குமேயயானால், இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் நெல்மணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நாளொன்றுக்கு குழந்தைகளுக்கு எதிராக 350 குற்றங்கள்- குழந்தைகள் உரிமைகள் அமைப்பு ஆய்வில் தகவல்

விவசாயிகளில் கணிசமானோர் இணையதளம், ஸ்மார்ட் ஃபோன் போன்ற நவீன தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தும் நிலையில் இல்லை என்பதால், பழைய நிலையிலேயே நெல்கொள்முதல் பணியைத் தொடர மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதாக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்