Aran Sei

இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலையளிக்கிறது – ஐ.நா மனித உரிமை ஆணையர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில், இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், ஊடகவியலாளர்கள் மீதான தேசதுரோக குற்றச்சாட்டுகள், சமூக ஊடகங்கள்மீதான கட்டுப்பாடு ஆகியவை குறித்து, ஆணையர் மைக்கெல் பேச்லெட் கேள்வி  எழுப்பியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐநா சபையின் மனித உரிமை அவையில் பேசிய பேச்லெட், ஸ்பெயின் முதல் சூடான் வரையிலான 50 நாடுகளின் மனித உரிமை பிரச்னைகள் தொடர்பாக தனது கவலையை தெரிவித்திருந்தாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல் தொடர்பாக பேசிய பேச்லெட், இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டங்கள், “”சட்டங்கள் மற்றும் கொள்கைகள் சம்பந்தப்பட்டவர்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன” என்றும், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் உரையாடல், “அனைவரின் உரிமைகளையும் மதிக்கும் இந்த நெருக்கடிக்கு ஒரு சமமான தீர்வுக்கு வழிவகுக்கும்” என நம்புகிறேன் என்றும் கூறியதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா

போராட்டம் தொடர்பான கருத்துகள் தெரிவித்த மற்றும் அதைப் பகிர்ந்ததற்கு ஊடகவியலாளர்கள்மீது வழக்கு பதிவு செய்வதும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை தடுக்கும் முயற்சிகளும், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக அவர் குற்றம்சாட்டினார் என தி வயர் கூறியுள்ளது.

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் புதிய சோதனை முயற்சியாக, அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்கள் புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விளிம்புநிலை மற்றும் ஏழை மக்களின் தேவைகளைக் கேட்டு, தீர்த்துவைக்கப்பட்டதை வரவேற்கிறேன் எனப் பேச்லெட் தெரிவித்திருப்பதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, இந்திரா மணி பாண்டே, ”2024 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கை இந்திய அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியதன் நோக்கம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்குச் சிறந்த விலையை உணர்ந்து, அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதற்கு உதவுவதாகும். இது, குறிப்பாக சிறு விவசாயிகளுக்குப் பயனளிக்கும் மற்றும் விவசாயிகளுக்குக் கூடுதல் தேர்வுகளை வழங்கும். விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசாங்கம் மிகுந்த மரியாதை காட்டியுள்ளதுடன், அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது” என தெரிவித்தாக தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

ஆணையரின் சில கருத்தகளால் குழம்பியுள்ளதாக கூறியுள்ள மணி பாண்டே,  “சவால்களை எதிர்கொள்ள இந்திய அரசாங்கம் மேற்கொண்ட மகத்தான முயற்சிகளை அவர் மறந்துவிட்டார். உண்மையில் இந்தச் சவால்களைத் தூண்டும் பல காரணிகள், விவசாயிகளின் உரிமைகள் என்ற பெயரில் எங்கள் குடியரசு தினத்தன்று தூண்டப்பட்ட வன்முறையை அவர் கவனிக்கவில்லை, ”என்று கூறிதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காஷ்மீரின் நிலைமைகுறித்து பேசிய பேச்லெட், ”சிவில் சமூக ஆர்வலர்கள்மீதான தகவல்தொடர்புகள் மற்றும் தடைகள்குறித்த கட்டுப்பாடுகள் கவலை அளிக்கின்றன. காஷ்மீரில் ஆகஸ்ட் 2019 க்குப் பிறகு முதன்முறையாக 4 ஜி இணைய சேவை வழங்கப்பட்ட போதும், “தகவல் முடக்கம், குடிமக்களின் பங்களிப்பு, வணிகம், வாழ்வாதாரங்கள், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தகவல்களுக்கான பயன்பாட்டை தீவிரமாக தடுத்துள்ளது” என கூறியதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள இந்திய தூதர், “எந்தவொரு நோக்கமும் மற்றும் சார்பற்றதன்மையும், மனித உரிமை மதிப்பீட்டின் அடையாளங்களாக இருக்க வேண்டும். மனித உரிமை ஆணையரின் பேச்சில், இரண்டும் இல்லாததைக் கண்டு நாங்கள் வருந்துகிறோம்” என்று கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்