Aran Sei

‘பாஜக ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளது’ – என்.சி.ஹச்.ஆர்.ஓ அறிக்கை

பாஜக பொறுப்பேற்று ஆட்சியிலுள்ள இந்த 7 ஆண்டுகளில்இந்தியாவில் வாழுகின்ற மக்கள் குறிப்பாக முற்போக்கு சிந்தனைவாதிகள், மதச்சார்பற்ற தலைவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கதையாக நடைபெற்றுவருகின்றதென தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இன்று ஜூன் 26 சர்வதேச சித்திரவதைக்கு எதிரான தினத்திற்காக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

 

மாடுகளை ஏற்றிச் சென்றதால் இஸ்லாமியர்கள் படுகொலை – நீதித்துறை விசாரணை வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

மேலும், இந்த அறிக்கையில், “அதிகாரத்தைப் பயன்படுத்தி பொய் வழக்குகள் பதிவு செய்து கொடும் அடக்குமுறை சட்டங்களில் சிறையில் அடைக்கப்பட்டும், தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதைக்கு உட்படுத்துவது போன்ற நிகழ்வுகளும் தொடர்கின்றது. இது போன்ற நிகழ்வுகளை வெளியுலகிற்கு கொண்டுவருவோர் மீது பாஜக அரசு பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றது. தொடர்ந்து பேச்சுரிமை மறுக்கப்படுகின்றது.” என்றும் தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று, மனிதனின் அடிப்படை உரிமைகளைக் கூட கோர முடியாத அளவிற்கு தேசத்துரோக வழக்குகள் பதியப் படுப்படுவதாகவும், அடிப்படை உரிமைகளுக்காகக் கூட நீதிமன்றங்களை நாடும் அவலங்களும் நடைபெறுவதாகவும், ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அங்கும் நீதி மறுக்கப்படும் சூழ்நிலைகள் நிலவுவதாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேசிய மனித உரிமைகள் ஆணையம்

 

இந்நிலையில், “பத்திரிக்கையாளர் சித்தீக் காப்பான் அவர்களின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை ஒரு மாதிரியான நிலைப்பாட்டையும், ரிபப்ளிக் டிவி அர்ணாப் கோஸ்வாமி வழக்கில் வேறு மாதிரியான நிலைப்பாட்டையும் உச்சநீதிமன்றம் அணுகியுள்ளது. எனவே இது நீதித்துறையின் மீது உள்ள மக்களின் நம்பகத்தன்மையை குறைக்கின்றது” எனவும் மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், “வட மாநிலங்களில் தொடர்ந்து கும்பல் தாக்குதல்கள் மூலம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது, வயது வித்தியாசம் இல்லாமல் மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது, இதுபோன்ற தாக்குதல்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் குறிப்பாக உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் நடைபெறுகின்றன. மேலும் இவர்களின் இந்துத்துவா சிந்தனைகளுக்கு எதிராக உள்ள மாநிலங்களில் ஆட்சி கலைப்பு போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளையும் இவர்கள் எடுத்துள்ளனர்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

அதுமட்டுமல்லாது, காஷ்மீர் மீது தொடுக்கப்பட்டுள்ள அதிகார தாக்குதல் அங்கு வாழும் மக்களை நிலைகுலையச் செய்துள்ளதுள்ளதாகவும் , அதேபோல் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு போன்றவற்றின் மீதும் பாஜகவின் கொடூர பார்வை காரணமாக மக்களின் வாழ்க்கை முறை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது,தமிழகத்தில் ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பின்பும், அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசு விடுதலையை மறுக்கின்றது, அதேபோல் மாநில அரசும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுக்கின்றது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் மன்றம் – ‘ தேர்தல் நடப்பதால் புறக்கணிப்பு; இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருக்கும்’ : ஸ்டாலின், வைகோ

மேலும், “காவலர்களால் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் ஒட்டுமொத்த மனசாட்சியையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மனித உரிமைகள் என்னும் வார்த்தையின் அர்த்தத்தை காவல்துறையின் வரலாற்றில் பார்க்க முடியாது என்பது போல் தொடர்ந்து காவல்துறை சாமானிய மனிதர்களை மிக மோசமாக நடத்துகிறது, எனவே,காவல் நிலைய நடவடிக்கைகளில் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து அவ்வப்போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் படி அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும், பொருத்தப்பட்ட கேமராக்கள் ஒழுங்காக பராமரிக்கப்பட்டு சரியாக வேலை செய்கிறதா என்பதையும் தமிழக அரசு தனிக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்” என்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிக்கையில் கூறியுள்ளது.

 

விவசாயிகள் போராட்டம்: மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம்

 

இதேபோன்று, “அரசின் தோல்வியடைந்த திட்டங்களுக்கு எதிராக குறிப்பாக சிஐஏ (குடியுரிமைச் சட்டம்), பணமதிப்பிழப்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிராக போராடியவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிந்துள்ளன, இந்த வழக்குகள் அனைத்தும் போலியாக பதியப்பட்டுள்ளன எனவே தமிழக அரசு இந்த போலியான வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். சமீபத்தில் அரசுக்கு எதிராக போராடுவது தேச துரோகம் ஆகாது என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.” என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான இத்தினத்தில் தனிமனிதனாக சித்திர வதைக்கு எதிராக உறுதிமொழி எடுபதைக் காட்டிலும் அரசும், அதிகார வர்க்கமும் சித்திரவதைகளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க வேண்டிய சூழலே உள்ளது என்றும் தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்