Aran Sei

மத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – சுடுகாடுகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்சுகள்

த்திய பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் அதிக சடலங்கள் குவிந்து வருவதாகவும், அரசாங்கம் அறிவித்த அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கைக்கும், சடலங்களின் எண்ணிக்கைக்கும் அதிக வேறுபாடு இருப்பதாகவும் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

போபாலில் உள்ள பத்ரடா சுடுகாட்டில், 1984 ஆம் ஆண்டு போபால் விசவாயு விபத்திற்கு பிறகு, இவ்வளவு எண்ணிக்கையிலான சடலங்களைப் பார்த்ததில்லையென, அங்குள்ள மக்கள் தெரிவித்திருப்பதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சகோதரரின் உடலைத் தகனம் செய்ய வந்திருந்த 54 வயதான பிஎன் பாண்டே, ”விசவாயு விபத்தின்போது, நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தே. அப்போது இது போன்ற காட்சிகளைப் பார்த்தேன். இன்று வெறும் 4 மணி நேரத்தில் 30 முதல் 40 சடலங்களைப் பார்த்திருக்கிறேன்” என என்டிடிவி -யிடம் கூறியுள்ளார்.

அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகளால் பாதிக்கப்படும் மின்மயான ஊழியர்கள் – லக்னோவில் ஓய்வின்றி 19 மணிநேரம் உழைக்கும் அவலம்

இறுதி சடங்குகளை மேற்கொள்ள மக்கள் காத்திருந்தபோது, உடல்களுடன் ஆம்புலன்ஸ்கள் சாலையில் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவினரின் உடலைத் தகனம் செய்ய வந்திருந்த சந்தோஷ் ரகுவன்ஷி, ”நான்கு மணிநேரம் காத்திருந்தும் இடம் கிடைக்காததால், எங்களால் இறுதி சடங்குகளைச் செய்ய முடியாவில்லை” என தெரிவித்தாக என்டிடிவி கூறியுள்ளது.

திங்கள்கிழமை (ஏப்ரல் 12) மத்திய பிரதேசம் முழுவதும் கொரோனாவால் 37 உயிரிழப்புகள் என அரசாங்கம் தெரிவித்திருக்கும் நிலையில், பத்ரடா சுடுகாட்டில் மட்டும் 377 உடல்கள் தகனம் செய்யப்பட்டுப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8 முதல் 12 ஆம் தேதி வரையிலான காலத்தில், கொரோனா தொற்றால் 135 உயிரிழப்புகள் மட்டுமே நிகழ்ந்திருப்பதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கும் நிலையில், 259 உடல்கள் தகனம் செய்யப்பட்டிருப்பதாக என்டிடிவி கூறியுள்ளது.

கொரோனா நோய் பரப்பும் கூடாரமாக ‘ஓயாமரி’ மின் மயானம்

இறப்பு எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர், ”இறப்பு எண்ணிக்கையை மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அப்படி செய்வதால் எந்த விருதும் கிடைக்கப்போவதில்லை” என தெரிவித்துள்ளதாக என்டிடிவி குறிப்பிடப்பட்டுள்ளது.

கைகளில் கொப்பளங்கள் வருவதில் இருந்து, விறகுகள் பற்றாக்குறை ஏற்படுவது வரை பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருவதால், சுடுகாட்டில் பணியாற்றுபவர்கள் தினந்தோறும் மன அழுத்ததுடன் போராடி வருவதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீட்டை விழிப்புணர்வோடு கவனிக்க வேண்டும் – ஆனந்த் டெல்டும்டே

”தினமும் 40 முதல் 45 உடல்கள்வரை வருவதால், 100 முதல் 150 குவிண்டால் வரை மரங்கள் அறுக்கப்படுகிறது” என போபால் சுடுகாட்டின் பணியாற்றும் ரைஸ் கான் என்பவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு ஊழியரான பிரதீப் கனோஜா, ”நான் பலவீனமாக உணர்கிறேன், சோர்வடைகிறேன்… பல உடல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவை இங்கே கூட்டமாக உள்ளன. மதிய உணவுக்குக் கூட எங்களால் ஓய்வு எடுக்க முடிவதில்லை” என கூறியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்