Aran Sei

அசாமில் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்திடம் அன்சாலிக் கங்கா மோர்ச்சா கோரிக்கை

மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் அசாம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் அஞ்சாலிக் கண மோர்ச்சா (ஏஜிஎம்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஏஜிஎம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அஜித்குமார் புயான் எழுதியிருக்கும் கடிதத்தில், தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம், மாநில அதிகாரிகளை நம்பியே உள்ளது. சில பகுதிகளில் பாஜக ஆதரவு அதிகாரிகளால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற இருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்காளர்களுக்கு கொடுப்பதாக இருந்த ஜிலேபி, சமோசாக்கள் பறிமுதல்: தேர்தல் நடத்தை விதியை மீறியதாக 10 பேர் கைது

தேர்தல் நடத்தை விதிகள் 1961ன்படி வாக்கு எண்ணிக்கை நியாயமாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் விதமாக முழு வாக்கு எண்ணிக்கையையும் வீடியோ பதிவு செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

முழு வாக்குப்பதிவு வீடியோ பதிவு செய்யும் பட்சத்தில் முறைகேடு நடைபெற்றதாக எந்த ஒரு  தரப்பினரும் புகார் தெரிவிக்க முடியாது என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்