Aran Sei

திரிபுரா பழங்குடியினர் சபை தேர்தல் – படுதோல்வி அடைந்த பாஜக

Image Credits: DNA India

திரிபுரா பழங்குடியினர் சபை  தேர்தலில் திரிபுரா சுதேச மக்கள் முன்னணியுடன் கூட்டணி (ஐபிஎஃப்டி) அமைத்துப் போட்டியிட்ட பாஜக படுதோல்வியடந்துள்ளது.

மொத்தமுள்ள 28 இடங்களில் 18 இடங்களைச் சுதேச முற்போக்கு பிராந்திய கூட்டணி (டிஐபிஆர்.ஏ) என்ற புதிய அமைப்பு கைப்பற்றியுள்ளது. பாஜக கூட்டணிக்கு 9 இடங்களும், மீதமிருக்கும் ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

எரிபொருள் மீதான வாட் திரும்பப் பெற வேண்டும் – வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

20 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநிலத்தின் பழங்குடியினர் சபையில் 30 இடங்கள் உள்ளன. இதில் ஆளுநரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களைத் தவிர மீதமுள்ள 28 இடங்களுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.

தன்னாட்சி அமைப்பான பழங்குடியின சபை மாநிலத்தின் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியது. மேலும், அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் ஒரு வலுவான அரசியல் சக்தியாக உள்ளனர். அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்காக உள்ளனர்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்