Aran Sei

லாபமற்ற விலையில் தடுப்பூசி மருந்தை வழங்கத் தயார் – ஃபைசர் நிறுவனம் தகவல்

Image Credits: CNBC

ந்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாக, லாபமற்ற விலையில் தடுப்பூசியை வழங்கத் தயார் என ஃபைசர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் தொடர்சியாக மருந்து கிடைப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்து ஈடுபடுவதில் உறுதியாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் அரசு ஒப்பந்தம் வாயிலாக மட்டுமே தடுப்பூசிகளை விநியோகிக்க விரும்புவதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ஃபைசர் மற்றும் பயோ என்டெக் தடுப்பூசியை அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தில் பயன்பாட்டிற்கு கிடைக்கச் செய்வதில் அரசாங்கத்துடனான எங்கள் ஈடுபாட்டைத் தொடர்வதில்  உறுதியாக உள்ளோம்” என ஃபைசர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் பிடிஐ க்கு பதிலளித்தார்.

அரசு மருத்துவமனையில் 1700 கொரோனா தடுப்பூசிகள் திருட்டு – வழக்குப் பதிந்த ஹரியானா காவல்துறை

முன்னர் தெரிவித்திருந்ததை போல், தொற்றுநோய் அதிகமாகப் பரவி வரும் காலத்தில், அரசாங்கங்களின் தடுப்பூசி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவது. கொரோனா தடுப்பூசியை அந்தந்த அரசாங்க அதிகாரிகளுடனான ஒப்பந்தங்கள் செய்வது. ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பின்பற்றி அரசாங்க ஒப்பந்தங்கள்மூலம் மட்டுமே ஃபைசர் வழங்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவைப் பொறுத்தவரை, ஃபைசர் நிறுவனம் தனது தடுப்பூசிக்கான இலாப நோக்கற்ற விலையை அரசாங்க தடுப்பூசித் திட்டத்திற்காக வழங்கத் தயாராக உள்ளது”, என  விலையை வெளிப்படுத்தாமல் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்