பாஜக அரசிற்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட கனடாவைச் சேர்ந்த தமிழ் மாணவி லோயிஸ் சோபியாவின் தந்தைக்கு தமிழ்நாடு அரசு 2 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனிதஉரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லோயிஸ் சோபியா, கனடாவில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் படித்து வந்த போது விடுமுறைக்காக 2018 செப்டம்பரில், இந்தியா வந்திருந்தார். இந்தியா வந்த சூழலில் அன்றைய பாஜக தலைவரும் தற்போதைய தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பயணித்த விமானத்தில், லோயிஸ் சோபியாவும் அவரது தாய் தந்தையரும் பயணித்துள்ளனர்.
‘பாஜகவை பண்பாட்டு ரீதியாகவும் கருத்தியல் அடிப்படையிலும் தனிப்படுத்த வேண்டும்’ -சீதாராம் யெச்சூரி
அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை பார்த்ததும் சோபியா தனது இருக்கையில் இருந்து எழுந்து ஒன்றிய பாஜக அரசிற்கு எதிரான எதிராக முழக்கங்களை எழுப்பியதாக புகார் எழுந்தது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடன் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் சோபியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் மிரட்டியதாகவும், அவரது பெற்றோரையும் விமான நிலையத்தை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர், தூத்துக்குடி விமான நிலைய காவல் கண்காணிப்பாளர் நித்யா இதில் தலையிட்டு பாஜகவினரை அமைதிப்படுத்தினார். இதனை அடுத்து சோபியாவை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமலை அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். சோபியாவின் தந்தையான மருத்துவர் சாமி காவல்நிலையத்திற்கு வெளியேயே நீண்டநேரம் காத்திருக்க வைத்துள்ளார்.
இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறிக்க வலியுறுத்திய பீகார் பாஜக எம்எல்ஏ: எதிர்க்கட்சிகள் கண்டனம்
இதனை ஒட்டி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மருத்துவர் சாமி அளித்த மனுவில், “காவல்துறையினர் எனது மகளை விசாரித்து சில காகிதங்களில் கையெழுத்துப் போடச் சொல்லி சித்ரவதை செய்துள்ளனர். அதன் பிறகு அவள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டாள். இந்நிலையில் சோபியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று கூறியிருந்தார்.
“காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கை எனது மகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என் மகளுக்கு எதிராகப் பொய் வழக்குப் போட்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மாறாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதால் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
‘பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், மதுக்கடைகள் திறக்கப்படும்’ –மணிப்பூர் முதலமைச்சர்
“விமான நிலையம் போன்ற உயர் பாதுகாப்பு இடத்தில் சோபியா தொந்தரவு செய்ததாகவும், தனது உரிமைகளை மீறி சக பயணி ஒருவரை பார்த்துச் சத்தமிட்டுள்ளார் என்று தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் தான் காவல்துறையினரால் உரிய விசாரணை நடத்தி சோபியா கைது செய்யப்பட்டார்” என்று மருத்துவர் சாமியின் குற்றச்சாட்டை காவல்துறை அதிகாரிகள் மறுத்தனர்.
சோபியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குக் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், உச்சநீதிமன்றத்தின் நடைமுறையை மீறி சோபியாவைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“காவல்துறையினரின் நடவடிக்கையால், சோபியாவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், மருத்துவர் சாமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதில், காவல் ஆய்வாளர் திருமலை அவர்கள் 50,000 ரூபாயும், இதில் சம்பந்தப்பட்ட மற்ற 6 காவல்துறை அதிகாரிகள் தலா 25,000 ரூபாயும் வழங்க வேண்டும்” என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் “சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளது.
உ.பி., தேர்தல் – வகுப்புவாதத்தை உருவாக்குவதாக பாஜக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு
“மருத்துவர் சாமிக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்துக்குள் தமிழ்நாடு அரசு செலுத்த வேண்டும். பிறகு தமிழ்நாடு அரசு அந்த பணத்தை 7 காவல்துறை அதிகாரிகளிடமிருந்தும் வசூலித்துக் கொள்ள வேண்டும்” என்று அவ்வுத்தரவில் கூறப்பட்டுள்ளது.
“7 ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத்தண்டனை பெறக் கூடிய குற்றம் செய்த யாரையும் எவ்வித ஆதாரமும் இன்றி கைது செய்ய வேண்டாம் என்று காவல்துறையினருக்குக் காவல் ஆணையர் அறிவுறுத்த வேண்டும்” என்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த தீர்ப்பிற்கு சோபியா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “நான் காவல்துறையினரால் மிரட்டபட்டேன். அவர்கள் என்னை சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தனர். ஆரம்பத்தில் இருந்தே காவல்துறையினர் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தின் அடிப்படை விதிகளை மீறியே என்னைக் கைது செய்தனர்” என்று சோபியா தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்து வரும் நேருவின் இந்தியா – சிங்கப்பூர் பிரதமர் பிரதமர் லீ சியென் லூங்
“எனக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் முதலில் எளிதில் பிணை கிடைக்கக் கூடிய பொய்ப்புகார்தான் இருந்தது. பின்னர் தான் பிணையில் வெளிவராத முடியாத பொய்யான புகார்கள் சேர்க்கப்பட்டன” என்று சோபியா கூறியுள்ளார்.
“காவல்துறை அதிகாரிகள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிவதில் இருந்தும், சட்டத்தை மீறாமல் இருக்கவும் இந்தத் தீர்ப்பு ஊக்கப்படுத்தும் என நான் நம்புகிறேன்” என்று சோபியா கூறியுள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.