Aran Sei

அவசரநிலை காலக்கட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு மதிப்பூதியம் – இமாச்சல் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்

1975 ஆம்  ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலக்கட்டத்தின்போது அரசியல் காரணங்களுக்காக சிறைவைக்கப்பட்ட இமாச்சல் பிரதேச மக்களுக்கு மதிப்பூதியம் வழங்க வழிவகை செய்யும் மசோதா அம்மாநில சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்காக, லோக்தந்திர பிரஹ்ரிஸ் என்று அழைக்கப்படும் எண்பத்தொரு பயனாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேச லோக்தந்திர பிரஹ்ரி சம்மன் மசோதா, 2021-என்ற இம்மசோதாவை சட்டபேரவையில் அறிமுகப்படுத்திப் பேசிய பாஜகவை சேர்ந்த முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், இவர்கள் 15 நாட்கள்வரை சிறைத்தண்டனை அனுபவித்திருந்தால், இச்சட்டத்தின் கீழ் ரூ .8,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் 15 நாட்களுக்கு மேல் சிறையடைக்கப்பட்டவர்களுக்கு ரூ .12,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர், விவசாயிகள் உரிமைகள் – இமாச்சல பிரதேசத்தில் தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்

“1975 ஜூன் 25 தொடங்கி 1977 மார்ச் 21 வரை அமலில் இருந்த அவசரநிலை காலத்தில், அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொருட்டு பலர் போராடினார்கள். அவர்களைக் கௌரவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

பயனாளி ஒருவர் இறந்திருந்தால், அவரின் வாழ்க்கைத் துணைக்கு இந்தப் பயன் சென்றடையும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்