Aran Sei

ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது- ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ரேஷன் அட்டை இல்லாத கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வாறு உணவுப்பொருட்கள் வழங்குவீர்கள் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா ஃபாட்டியிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவை வழங்குங்கள்’ – சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

இந்நிலையியல், இதுகுறித்து பதிலளித்த வழக்கறிஞர் ஐஸ்வர்யா, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரதமர் கரிப் கல்யாண் அண்ணா யோஜனா திட்டத்தின் வழியாக 80 கோடி ஏழைகளுக்கு உணவளிக்க நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளதாகவும், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு ஒரு நபருக்கு 5 கிலோ உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 8 லட்சம் மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

இதனை தொடர்ந்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற அமர்வு, “நீங்கள் உணவுப்பொருட்கள் வழங்குவதிலோ, ரேஷன் அட்டை வைத்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குகிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எங்கள் அச்சமெல்லாம் ரேஷன் அட்டை வைத்தில்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இதற்குப் பதிலளித்த ஐஸ்வர்யா ஃபாட்டி, ஒன்றிய அரசு உணவுப்பொருட்களை கொள்முதல் செய்வதாகவும், அதை மாநில அரசுகள் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மனுவில் சில சமூகஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ்,”ரேஷன் அட்டைகள் அற்ற ஏழைகளை மாநில அரசின் கருணைக்கு ஒன்றிய அரசு விட்டுவிடுகிறது. ரேஷன் அட்டைகள் அற்றவர்களை சாவதற்கு விட்டுவிடக் கூடாது. அவர்களது பொருளாதார நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது,” என்று தெரிவித்ததாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

‘மத துறவிகளுக்கு கூட செலுத்தப்படும் தடுப்பு மருந்து, ஏன் எங்களுக்கு இல்லை’ – பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தோர் பிரதமருக்கு கடிதம்

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள்குறித்த தகவல்களை இணையதளம் வழியே முறைபடுத்த ஏன் மூன்று அல்லது நான்கு மாத காலம் என்று ஒன்றிய அரசுக்கு நீதிபதி அசோக் பூஷன் கேள்வியெழுப்பியுள்ளதாகவும் தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்