Aran Sei

‘பட்டியல் சமூகத்திற்கு அநீதியும் வன்கொடுமையும் நடத்திவிட்டு அரசியலமைப்பு நாளை எப்படி கொண்டாடுகிறது பாஜக’ – பிரியங்கா காந்தி கேள்வி

த்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அநீதியையும் வன்முறையையும் நிகழ்த்திக்கொண்டு எவ்வாறு அரசியலமைப்பு தினத்தை கொண்டாடமுடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சரோன் தொகுதியில் பூல்சந்த் பாசி என்ற தொழிலாளி, அவரின் மனைவி மீனு (40), மகள் சப்னா (17), மகன் சிவா (10) ஆகியோர் அண்மையில் கொல்லப்பட்டனர்.

‘உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கையில் இருந்து இந்தியா வெளியேறுவதே தீர்வு’- பாரதிய கிசான் யூனியன்

இந்நிலையில் பிரயாக்ராஜில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரியங்கா காந்தி ”கொல்லப்பட்ட தொழிலாளியின் சகோதரர் நாட்டைக் காவல் காக்கும் சாஷ்த்ரா சீமா பால் படைப்பிரிவில், நக்சலைட்டுகள் அதிகமாக இருக்கும் பகுதியில் பணியாற்றி வருகிறார். ஆனால், நாட்டுக்காக அவர் சேவை செய்தும் அவருக்குக் கிடைத்தது என்ன? ஏன் அவருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை?

ஆளும் அரசால், நிர்வாகத்தால் நீதி வழங்க முடியாத நிலையில், அரசியலமைப்புச் சட்ட நாள் கொண்டாடி என்ன பயன்? அரசியலமைப்புச் சட்டம் அழிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் அந்தச் சட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

அதிக ஏழைகள் வாழும் மாநிலங்களின் பட்டியலை அறிவித்த நிதி ஆயோக் – பாஜக ஆளும் உத்தரபிரதேசம் மூன்றாமிடம்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அச்சத்தில் இருக்கிறார்கள். சிலர் வந்து மிரட்டும்போது காவல்துறையினர் உதவி செய்யாவிட்டால் என்ன செய்வது எனக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அச்சப்படுகிறார்கள். காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்கச் சென்றால், கிண்டல் செய்து சிரிக்கிறார்கள். இவ்வாறு இருந்தால் புகார் எவ்வாறு வழங்குவது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் தன்னிடம் கூறியதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தக் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீண்டும் வந்து மிரட்டியுள்ளனர். கடந்த ஆண்டிலும் இதேபோன்று சம்பவம் நடந்துள்ளது. ஏன் இந்த சமூக விரோதிகளைக் காவல்துறையால் தடுக்க முடியவில்லை, அந்தக் குடும்பத்தினருக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை?

பிரயாக்ராஜில் பூல்சந்த் பாசியின் குடும்பத்துக்கு நடந்த சம்பவம், அரசு உதவியால் பட்டியல் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும்.

2019 முதல், அரசு இயந்திரம் குண்டர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தது.

அநீதி, வன்கொடுமைகள் மட்டுமே செய்யும் பாஜக அரசு எப்படி அரசியல் சாசன தினத்தைக் கொண்டாடுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்