Aran Sei

காஷ்மீரின் அரசியல் தலைவர் கிலானியின் உடலை அத்துமீறிஅடக்கம் செய்த காவல்துறை – குடும்பத்தினர் குற்றச்சாட்டு

ம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி உரிமைக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தை முன்னெடுத்தவரும், ஹுரியத் அமைப்பைச் சார்ந்தவருமான சையது அலி ஷா கிலானியின் உடலைக் காவல்துறையே அடக்கம் செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கிலானி இறந்த அன்று இரவு அவரது வீட்டுக்கு வந்த காவல்துறையினர் கிலானியின் உடலை பாதுகாப்புக் காரணங்களுக்காக விடிவதற்குள் அடக்கம் செய்யவேண்டுமெனக் நிர்பந்தித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவரது மகன் நயீம் கிலானி, “அவர் (கிலானி) எந்த தவறும் செய்யாததால் நான் எதிர்த்தேன், விடுவதற்காகக் காத்திருக்கலாம். அப்போது எனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த உறவினர்கள் வருவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கிலானியின் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

மேலும், அவர் மீது போர்த்தப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடி போன்ற பிறை மற்றும் நட்சத்திரம் கொண்ட பச்சை நிறத்திலான கொடியைக் கண்டு அதுகுறித்து காவல்துறை முதல் தகவல் அறிக்கையும் பதிந்துள்ளது.
அதுமட்டுமல்லாது, அடையாளம் தெரியாத நபர்கள் தேசவிரோத முழக்கம் எழுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அத்துமீறி நுழைந்தக் காவல்துறை கிலானியின் உடலை அவரது வீட்டு முற்றத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

அவர்கள் பல வருடங்களாக இந்த நாளுக்காக தயாராகி வந்துள்ளனர். வீட்டிற்கு வெளியே ஒரு ஆம்புலன்ஸ் இருந்தது. அவர்கள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார்கள்; அடக்கம் செய்யப்பட்ட கவசத்திலிருந்து கல்லறை வரை, அவரது (ஜீலானியின்) அடக்கத்தில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை, ”என்று நயீம் கூறியுள்ளார்.

கிலானியின் இறுதிச் சடங்கு குறித்து தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், தெற்கு காஷ்மீர் பகுதியில் வசித்த கிலானியின் உறவினர் அப்துல் ரஷீத் ஷா மற்றும் அவரது மகன் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

source: the wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்