Aran Sei

‘மாற்றுக் கருத்துடையவர்களை கைது செய்யும் பாஜக – உத்தரபிரதேச காவல்துறையால் முதியவர் கைது செய்தது குறித்து உறவினர்கள் ஆதங்கம்

யோகி ஆதித்யநாத்,பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசின் கொள்கைகள் குறித்து கருத்து தெரிவித்ததால் சென்னையில் உத்தரபிரதேசக் காவல்துறையால் கைது செய்யப்பட்ட முதியவர் “மாற்றுக் கருத்துடையவர் மட்டுமே, பிரச்சனையை உண்டாக்குபவர் இல்லை” என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, மாதவரம் பகுதியில் வசித்து வரும் உத்தரபிரதேசத்தைச் சார்ந்த மன்மோகன் மிஸ்ரா என்ற முதியவரை கொரோனா குறித்து அச்சம் ஊட்டும் வகையில் அவரது யூடியூப் சேனலில் காணொளி வெளியிட்டார் என்றுக் கூறி உத்தரபிரதேச காவல்துறை கடந்த ஆகஸ்ட் 13 அன்று கைது செய்தது.
இதுகுறித்து தெரிவித்திருந்த அம்மாநிலக் காவல்துறையினர், அவரது கானொளியில் கொரோனா மூன்றாம் அலையில் ஒரு வீட்டுக்கு மூவர் உயிரிழப்பார்கள் என்றும், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 54 கோடி பேர் இறப்பார்கள் என்றும் அச்சமூட்டும் வகையில் பேசியதற்காக கைது செய்துள்ளோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவர் “தேசபக்தர்” மற்றும் “தீவிர தேசியவாதி” என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,” இந்தக் காலகட்டத்தில் தங்கள் கருத்துக்களை உரக்கக் கூறுகிற சாதாரண மனிதர்களைப் போல தான் அவரும். அவர் மோடியின் ஆதரவாளரும் கூட, அரசியல் ரீதியாக எந்தக் குழுவையும் சார்ந்தவருமில்லை. மாற்றுக் கருத்துடைய மற்றுமொரு முதியவர் மட்டுமே, பிரச்சனையை உண்டாக்குபவர் இல்லை. மாற்றுக் கருத்து கூறுவதற்காக எத்தனை பேரைக் கைது செய்வீர்கள்” என்றும் கூறியுள்ளார்.

இவர் இந்தப்பகுதியில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனப்பொருட்களை விற்று வருவதாகவும், வடநாட்டு தொழிலாளர்களுக்கு முகவராக செயல்பட்டுவருவதாகாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்