Aran Sei

’எத்தனை காலத்திற்கு இடஒதுக்கீடு தொடரும்’: உச்சநீதிமன்றத்தின் கேள்வி அடிப்படையில் தவறானது – வழக்குரைஞர் ராஜசேகரன்

‘‘இன்னும் எத்தனை தலைமுறைகளுக்குதான் இடஒதுக்கீடு நடைமுறை தொடரும்’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 50 சதவீத இடஒதுக்கீட்டை மீறக்கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த முந்தைய தீர்ப்பு மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நீட் முதுகலைத் தேர்வுகள்: ‘11600 தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே மையங்கள்’ – சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

இந்நிலையில், மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை 16 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

அப்போது, மகாராஷ்டிர மாநிலம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடும்போது,‘‘கடந்த 1931-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அப்போது மண்டல் தீர்ப்பில் இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது பல ஆண்டுகளான நிலையில், சூழ்நிலைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை மாற்றி அமைக்க வேண்டும்.அந்த விவகாரத்தை மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ”ஹரியாணா மாநிலத்தில் தனியார் துறைகளில் 75 சதவீதஇடஒதுக்கீடு கொண்டுவரப் பட்டுள்ளது. மேலும் முற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுவும் 50 சதவீத இடஒதுக்கீட்டை மீறும் செயலாகும்” என்று முகுல் ரோஹாத்கி வாதாடினார்.

‘பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்துங்கள்; நாற்திசையில் இருந்தும் முற்றுகையிடுங்கள்’ : விவசாயிகள் சங்கம் அழைப்பு

இந்த வாதத்திற்கு குறுக்கிட்ட நீதிபதி  ‘‘நீங்கள் சொல்வது போல்50 சதவீத இடஒதுக்கீடு இல்லாவிட்டால் அல்லது அளவு இல்லாவிட்டால், எல்லோருக்கும் சமத்துவம் என்ற கருத்து என்னவாகும்? இந்தவிவகாரத்தை நாங்களே தன்னிச்சையாக கையாள முடியும். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

இன்னமும் எத்தனை தலைமுறைகளுக்குதான் இடஒதுக்கீடு நடைமுறை தொடர்ந்து இருக்கும்? நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில் பலநலத் திட்டங்களை அரசுகள் செயல்படுத்தி உள்ளன. அப்படி இருந்தும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இன்னமும் முன்னேறவில்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காயத்ரி மந்திரம் ஓதினால் கொரோனா குறையுமா? – மத்திய அரசின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொள்ளும் எய்ம்ஸ்

நீதிபதியின் கேள்விக்குப் பதிளலித்துப் பேசிய ரோஹத்கி பதில், ‘‘மண்டல் தீர்ப்பு வெளியாகி பல ஆண்டுகளாகிவிட்டன. மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்து தற்போது 135 கோடியாகி விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேறி இருக்கிறார்கள். ஆனால், 50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துவிடவில்லை. நாட்டில் இன்னும் பட்டினி சாவுகள் நடைபெறுகின்றன. இந்திரா சஹானி தீர்ப்புத் தவறு என்று சொல்லவில்லை. அந்தத் தீர்ப்பு வந்து 30 ஆண்டுகளாகிவிட்டன. மக்கள்தொகை கூடிவிட்டது. இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையை  நாளை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதியின் கேள்வி குறித்துப் பேசிய வழக்குரைஞர் ஏ.பி.ராஜசேகரன், “இத்தனை ஆண்டுகள் இடஒதுக்கிட்டினால் எந்த மாற்றங்களும் நடக்கவில்லையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் இடஒதுக்கீடு தேவை என கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்ற பெஞ்ச். இப்படி மொத்த இடஒதுக்கிட்டையும் கேள்விக்குட்படுத்துவதே தவறு. என்று தெரிவித்த அவர், ”இந்தப் பிரச்சனை இந்திரா சஹானி வழக்கில் தொடங்கியது. அந்தத் தீர்ப்பு இடஒதுக்கீடு 50 விழுக்காட்டினை தாண்டக் கூடாது என்கிறது. பட்டியிலின மக்களுக்கும் பழங்குடிகளுக்கும் இருக்கும் இடஒதுக்கீடு உரிமைக்கும் பிற சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கியவர்களுக்கு இருக்கும் இடஒதுக்கிடும் வெவ்வேறு காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. 50 விழுக்காடு கணக்கிற்கு இவை இரண்டையும் ஒன்றாக சேர்ப்பதே தவறு” என்று தெரிவித்தார்.

‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த சரத் பவார் தலைவராக வேண்டும்’ – தொடர்ந்து வலியுறுத்தும் சிவசேனா

மேலும், “பிற்படுத்தப்பட்டவகுப்பினரில் அனைத்து   பிரிவினரும் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. மேலும் அவர்கள் சரியான அளவில் மத்திய கல்வி நிறுவனங்களில் பிரதிநிதித்துவப் படுத்தப்படவில்லை என்பதற்காகவே வழங்கப்படுகிறது. அந்தப் பிரதிநிதித்துவம் சரியான அளவை எட்டியவுடன் அந்தக் குறிப்பிட்ட சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கிய சமூகம் அந்த வகுப்பில் இருந்து பிற்பட்ட வகுப்பு கமிஷனால் வெளியேற்றப்படும். ஆக இப்படி இட ஒதுக்கீட்டை பொத்தம் பொதுவாக அணுகுவதும், அது விழுக்காட்டிற்குள் தான் இருக்க வேண்டும் என எதிர்பாப்பது தவறான ஒருபார்வையாகவே இருக்கும். எனவே உச்சநீதிமன்றம் தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்வதுஅவசியம்” என வழக்குரைஞர் ஏ.பி.ராஜசேகரன் அரண்செய்யிடம் கூறினார்.

source: liveLaw

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்