Aran Sei

வெளிவந்த உண்மையை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் – பெகசிஸ் விவகாரம் குறித்து ஒன்றிய அரசுக்கு ப. சிதம்பரம் கேள்வி

credits : the indian express

பிரான்ஸ் நாட்டைச் இரண்டு பத்திரிகையாளர்கள் பெகசிஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டதை அந்நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு உறுப்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் உண்மையை எத்தனை நாளைக்கு மறைத்து வைத்திருக்க முடியும் என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”பெகசிஸ் ஸ்பைவேர் தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பான மற்றொரு சம்பவம் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புலனாய்வு இதழான மீடியாபார்ட்டின் இரண்டு ஊடகவியலாளர்களின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான செய்திகளை வெளியிட்டது மீடியாபார்ட் நிறுவனம்” என பதிவிட்டார்.

மேலும், ”பெகசிஸ் வேவு பார்க்கப்பட்டது தொடர்பாக முழு விவாதம் நடைபெற வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வரும் நிலையில், உண்மையை எவ்வளவு காலம் மறைக்க முடியும்” என கேள்வி எழுப்பினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்