Aran Sei

வடமாநிலங்களை விட தென்மாநிலங்களில் பெண்கள் சுயாதீனமாக வாக்களிக்கிறார்கள் – தேர்தல் பற்றிய ஆய்வாளர் பிரதீப் குப்தா

நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகளில் ஆட்சியைத் தீர்மானிப்பதில் பெண்களின் வாக்குகள் முக்கியப்பங்களிக்கும் என்று தேர்தல்பற்றிய ஆய்வாளர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பெண்கள் எதனடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்பதை கணிப்பதில் குழப்பம் நிலவுவதாகவும், இந்திய தேர்தல்குறித்து அவர் எழுதிய ‘இந்தியா எவ்வாறு வாக்களிக்கிறது மற்றும் அதன் பொருள் என்ன’ என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் தினத்தில் வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடை – கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பெண்கள் எவ்வாறு வாக்களிக்கிறார்கள் என்ற அத்தியாயத்தில், பெண்களின் வாக்குகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காததால் தமிழ்நாடு 2016 மற்றும் பீகார் 2020 ஆகிய தேர்தல்களில் அவரது கணிப்புகள் எவ்வாறு பொய்த்து போனது என்பது குறித்து தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2016 ஆம் ஆண்டு தமிழக தேர்தலில் அவர் நடத்திய தேர்தல் கணிப்புகள்குறித்து தெரிவித்துள்ளதாவது, “எங்கள் தேர்தல் கணிப்பில் 88% ஆண்களும், 12% பெண்களும் பங்கேற்றிருந்தனர். அதில் ஆண் வாக்காளர்கள் பல கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பியதாக தெரிவித்த நிலையில், பெண் வாக்காளர்களில் பெரும்பான்மையினர் ஜெயலலிதாவுக்கே வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அந்த தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தார்” என்று கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் – கொலைகுற்றமும் சுமத்தலாம் என்று நீதிமன்றம் கருத்து

அதுமட்டுமல்லாது, பெண்களுக்கு அதிக நலத்திட்டங்களை செயல்படுத்துபவர்களுக்கு அவர்கள் வாக்களிப்பதாகவும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோர் ஆட்சிக்கு வர அதுவே காரணம் என்றும் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.

இதே போன்று பெண்கள் வாக்களிப்பதில் உள்ள அழுத்தங்கள்குறித்து தெரிவித்துள்ள அவர், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து தென் மாநிலங்களில் பெண்கள் ஆண் குடும்ப உறுப்பினர்களின் செல்வாக்கையும் மீறி சுயமுடிவுகளின் அடிப்படையில் வாக்களிப்பதாகவும், அதுவே வடமாநிலங்களில் தந்தை, கணவர், மாமனார் ஆகியோரின் அழுத்தத்தின் காரணமாக வாக்களிப்பதாகவும் அவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மே தின கொண்டாட்டத்திற்கு அனுமதி – தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்த சிபிஎம்

மேலும், தென் மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை எட்டிருப்பது அம்மாநிலங்களில் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக மாற்றி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்