Aran Sei

‘சாவர்க்கர் சிறையில் இருந்தபோது காந்தி எவ்வாறு தொடர்பு கொண்டார்? – ராஜ்நாத் சிங்குக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் கேள்வி

சாவர்க்கர் சிறையில் இருந்து விடுதலை அடைய ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம்  எழுத மகாத்மா காந்தி கூறினார் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதற்கு, “சாவர்க்கர் சிறையில் இருந்தார். அப்போது மகாத்மா காந்தி எங்கே இருந்தார், இருவரும் எப்படி சந்தித்து தொடர்பு கொண்டனர்” என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ராஜ்நாத் சிங்குக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

‘காந்திக்கு பதிலாக சாவர்க்கரை தேசத்தந்தையாக பாஜக அறிவிக்கும்’ – ராஜ்நாத் சிங் பேச்சிற்கு ஒவைசி கண்டனம்

சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியிட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். சாவர்க்கர் சிறையில் இருந்து விடுதலை அடைய ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியது தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. சாவர்க்கரை மன்னிப்பு கடிதம் எழுதும்படி சொன்னது காந்திதான் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்,” சாவர்க்கர் சிறையில் இருந்தார். அப்போது மகாத்மா காந்தி எங்கே இருந்தார். அந்த நேரத்தில் சாவர்க்கரை, காந்தி எப்படி தொடர்பு கொண்டார். அவர்கள் இருவரும் எப்படி சந்தித்து தொடர்பு கொண்டனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரே மூதாதையர்கள்தான்’ – மோகன் பகவத்

மேலும், சாவர்க்கர் சிறையில் இருந்தபடியே பிரிட்டிஷ் அரசுக்கு கருணை மனுவை அனுப்பினார். பிரிட்டிஷர் அரசுக்கு மனு அனுப்பி கருணை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். 1925 இல் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் தான் முதன்முதலில் இரண்டு தேசக் கோட்பாட்டைப் பற்றி பேசினார் என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கூற்றுக்கு இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

source: indianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்