Aran Sei

குஜராத் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – அதிகரித்து வரும் உயிரிழப்புகள்

குஜராத் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக்சிஜன் விநியோகத்தை ஒழுங்கபடுத்தவும், ஒருங்கிணைக்கவும் தனஞ்செய் திரிவேதி, சஞ்சீவ் குமார் என்ற இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை  நோடல் அதிகாரிகளாக குஜராத் அரசு நியமித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 பேரும், நவ்சரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்திருப்பதாகவும், பனஸ்கந்தா மருத்துவமனையிலும்  பல உயிரிழப்புகள் பதிவாகியிருப்பதாகவும் தி இந்து கூறியுள்ளது.

அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – 6 நோயாளிகள் உயிரிழப்பு

“ராஜ்கோட், மெஹ்சானா, சபர்காந்தா மற்றும் சுரேந்திரநகர் போன்ற பல மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என்று ஒரு மூத்த மருத்துவர் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப ஆக்சிஜன் விநியோகம் இருப்பதில்லை என அவர் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய தொழிற்துறை கட்டமைப்புகள் இருப்பதால் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கு சிறந்த இடமாக குஜராத் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

உலகிலேயே அதிக விலையில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் இந்தியா – முதலாளிகளின் நலன் காக்கிறதா மத்திய அரசு?

தனது மக்களவைத் தொகுதியான காந்திநகரில் உள்ள ஒரு அரசு ஆயுர்வேதக் கல்லூரியில் நிமிடத்திற்கு 280 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆக்ஸிஜன் ஆலையைத் திறந்து வைத்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (PM CARES) நிதியைப் பயன்படுத்தி குஜராத்தில் இது போன்ற மேலும் 11 ஆலைகள் அமைக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்