Aran Sei

வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறதா பாஜக? – பயத்தில் வேட்பாளர்களை பத்திரப்படுத்தும் எதிர்கட்சிகள்

ஸ்ஸாமில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியைச் சார்ந்த 10 வேட்பாளர்களை பாஜக தங்கள் கூட்டணிக்கு இழுக்கக்கூடும் என்பதால் அக்கட்சி அவர்களை பூட்டானில் தங்கவைத்துள்ளதாக ரிபப்லிக்வேர்ல்டு செய்தி வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறதா பாஜக? – ராஜஸ்தானில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள்

ஏற்கனவே வேட்பாளர்களோடு பாஜக குதிரை பேர நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என பயந்து அஸ்ஸாமில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அகில இந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி கட்சியின் 22 ராஜஸ்தானில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்களும் அஸ்ஸாமிற்கு வெளியே தங்கவைக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் – ” மாவட்ட கவுன்சிலர்களிடம் பாஜக குதிரை பேரம் “

கடந்த ஏப்ரல் 10 அன்று, அகில இந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணியின் தலைவர் மவுலானா பத்ருதீன் அஜ்மல் தலைமையில் 22 பேர் வேட்பாளர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியைச் சார்ந்த 10 வேட்பாளர்களை அக்கட்சி பூட்டானில் தங்கவைத்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு ஓவைசியாக உருமாறும் அஜ்மல் – அசாம் தேர்தல்

2011 ஆம் ஆண்டு தேர்தலில் போடோலாந்து மக்கள் முன்னணி பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அப்போது 12 தொகுதிகளில் வெற்றி பெற்று 3 கேபினட் அமைச்சர்களையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்