Aran Sei

ஆந்திராவில் ஆணவக் கொலை – சாதி மாறி திருமணம் செய்ததால் கொடூரம்

ந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரிக்கும் ஆதம் ஸ்மித்க்கும் சாதி கடந்து திருமணம் முடிந்து ஏழு வாரம் ஆன நிலையில், ஆதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

பட்டியல் இனத்தில் உள்ள மாதிகா சாதியைச் சேர்ந்தவர் ஆதம். பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் உள்ள குருபா சாதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்தக் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். கர்னூல் மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊரிலிருந்தால், அவர்களின் குடும்பத்தால் ஆபத்து நேருமோ என்று பயந்து, அதே மாவட்டத்தில் அடோனி நகரில் வாழ்க்கையைத் தொடங்யுள்ளனர் அந்தத் தம்பதி.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

இந்நிலையில், அந்த  சம்பவம் நடந்த அன்று, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் ஆதம் தாக்கப்பட்டுள்ளார். ஆதாமை தலையில் உலோகக் குழாய் கொண்டு தாக்கி, தலையில் ஒரு கற்பாறையை போட்டு கொன்றுள்ளனர் என்று அதோனி காவல்துறை தெரிவித்துள்ளதாக தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.  தனது குடும்பம் ஆதாமை கொலை செய்ததாக காவல்துறையிடம் மகேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

கர்னூல் மாவட்டத்தின் நந்தாவரம் மண்டலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊரான குரசலாவில் இருவரும் சந்தித்ததாக கூறும் மகேஸ்வரி,  அவரது குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு உடன்படாததால் ஊரை விட்டு வெளியேறி ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

’ஹத்ராஸ்’ வன்கொடுமை வழக்கு – துயரத்தின் மேல் படியும் துயரம்

“நாங்கள் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் திருமணத்திற்கு எனது குடும்பத்தினர் உடன்படாததால்  நவம்பர் 12 ஆம் தேதி ஆர்யா சமாஜில் திருமணம் செய்துகொண்டு, கர்னூல் காவல் நிலையம் சென்று காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்த்தித்து பாதுகாப்புக் கோரினோம். காவல் அதிகாரி ’எங்களிடமிருந்து விலகி இருக்கும்படி என் குடும்பத்தினரிடம் சொன்னார்’. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல்  தொலைபேசியில் எங்களை அச்சுறுத்தினார்கள். என் தந்தையும் மாமாவும்தான் சாதிமீறி திருமணம் செய்து கொண்டதால் என்  கணவரை கொன்றுள்ளனர்”  என்று மகேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளதாக தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

மகேஸ்வரியின் தந்தை சின்ன வீரண்ணா மற்றும் மாமா பெடா வீரண்ணா மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அடோனி நகர் வட்ட ஆய்வாளர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்