ஹாங் காங்கில் ஜனநாயக ரீதியாகக் குரல் எழுப்பி வரும் ‘ஆப்பிள் டெய்லி’ என்ற பத்திரிக்கைத் தனது கடைசிப் பதிப்பை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பத்திரிக்கை அலுவலகத்தில் காவல்துறை தேடுதல் வேட்டையை மேற்கொண்டு பத்திரிக்கையின் உரிமையாளர் மற்றும் பணிபுரிபவர்கள் மீது, புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்ததற்கு பின்னர், இவ்வாறு அறிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில்,”அனைத்து வாசகர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஹாங் காங்கை சேர்ந்தவர்கள் 26 ஆண்டுகளாக அளித்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதி கடந்து காதலித்த ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட அவலம் – பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், சிட்டீஸன் நியூஸ் மற்றும் இதர 6 ஊடகங்களின் ஊழியர் அமைப்புகள் கருப்பு உடை அணிந்து தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
அதுமட்டுமல்லாது, சில இடது சாரி அமைப்புகளும்,ஊடக அமைப்புகள் மற்றும் மேற்கத்திய நாடுகள், பத்திரிக்கையின் மீதான அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்துள்ளதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை கடந்த 1995 ஆம் ஆண்டு ஜிம்மி லாய் என்பவரால் தொடங்கப்பட்டதாகவும், அப்போதிருந்து ஜனநாயக ரீதியாகவும், சுதந்திரத்திற்காகவும் குரல்கொடுத்து வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.