Aran Sei

பழங்குடி இளைஞரைக் கொன்றதாகப் புகார் – குற்றஞ்சாட்டப்பட்டவரின் சட்டவிரோத ஆக்கிரமப்புகளை அகற்றிய காவல்துறை

த்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் வாகனத்தின் பின்புறத்தில் கட்டியிழுத்துச் செல்லபட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம்சட்டபட்டவர்களின்  சட்டவிரோத சொத்துகளை மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது.

நேற்றைய தினம் இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட மகேந்திர குர்ஜார் என்பவரது சொத்துகளை அம்மாவட்ட நிர்வாகம் தகர்த்துள்ளது.

பழங்குடியின சமுகத்தைச் சார்ந்த  கண்ஹையாலால் பீல், அந்தப்பகுதி வழியாக வந்த குஜ்ஜார் சமுகத்தைச் சார்ந்த   பால்காரின் இருசக்கர வாகனம் மோதியது. இதனைதொடர்ந்து, அவர் வண்டியில் இருந்த  பால் கொட்டியதில் ஆத்திரமடைந்த அவர்  கண்ஹையாலாலை தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக எட்டு பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பதியப்பட்டுள்ளது. ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

source: ndtv

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்