Aran Sei

விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

நேற்று ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை பாகுபாடின்றி தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், தற்போது இந்த அமைப்புகள் கடும் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

8 ஆண்டுகளில் கலால் வரி மூலம் ரூ. 26 லட்சம் கோடி ஈட்டிய ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தகவல்

அமலாக்கத்துறையின் சில அதிகாரங்களை நிலைநிறுத்து உச்சநீதிமன்ற தீர்ப்புகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக இருப்பதாக உள்ளது. எங்களுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்ட அவர், “ஜனநாயகத்தில் சித்தாந்தத்துக்காக போராட்டம் நடப்பதாகவும், “எங்களுக்கு யாருடனும் பகை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Source: NDTV

திமுக பாஜக கூட்டணிக்கு சான்ஸே இல்ல I Constantine Ravindran Interview I DMK I Aransei

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்