Aran Sei

விசாரணை அமைப்புகளைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பாஜக பயன்படுத்துகிறது – சிவசேனா கட்சி குற்றச்சாட்டு

காரஷ்டிரா மாநில அரசை அச்சுறுத்த அமலாக்கத்துறை (ED) மற்றும் மத்திய புலனாய்வுத் துறை போன்ற நிறுவனங்களைப் பாஜக  பயன்படுத்துவதாகச் சிவசேனா கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள செய்தியில்,  மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த பாஜக தலைவர்கள் மத்திய புலனாய்வு நிறுவனங்களான அமலாக்கத்துறை (ED) மற்றும் மத்திய புலனாய்வுத் துறை ஆகியவை தங்கள் பாக்கெட்களில் உள்ளதாக எண்ணி, தங்கள் அரசியல் எதிரிகளை மிரட்டப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

‘போராடுபவர்கள் விவசாயிகளே அல்ல; பாகிஸ்தான் ஆதரவாளர்கள்’ – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அக்ஷய்வர் லால் கோண்ட்

அதுமட்டுமல்லாது, மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது தான் பாஜகவின் ஒரே கொள்கையாக உள்ளது  என்றும் , அடிப்படையற்றக் குற்றச்சாட்டுகளின்  வழியாகப் மாநிலத்தில்  பதற்றத்தை உண்டாக்க முயல்கிறது என்றும் சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், “ஆளுநர் முதல் எதிர்க்கட்சி தலைவர்கள்வரை, எல்லோரும் மகாராஷ்டிரா அரசின்  எதிரி போன்று செயல்படுகின்றனர். ஒன்றிய அரசின் அழுத்தம் கொடுத்தும்   உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு களையவில்லை. எனவே, இப்போது பாஜகவின்  நடவடிக்கைகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?

அதுமட்டுமின்றி, ஒன்றிய அரசின்  இது போன்ற நடவடிக்கையால்  அமலாக்கத்துறை (ED) மற்றும் மத்திய புலனாய்வுத் துறை  மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும்  சிவசேனாக் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனாவில் கூறப்பட்டுள்ளது.

Source:THE NEW INDIAN EXPRESS

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்