Aran Sei

வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற புதிய விதிகள் – உள்துறை அமைச்சகம்

Image Credits: ZEE

ரசியல் கட்சிகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத விவசாய, மாணவ, மத மற்றும் பிற குழுக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியைப் பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது என ‘தி இந்து’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (எஃப்.சிஆர்ஏ), 2010-ன் கீழ் புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் 2011-ம் ஆண்டின் எஃப்சிஆர்ஏ விதிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய விதியின்படி, “துணை விதி (1) இன் (வி) மற்றும் (vi) பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள், தீவிர அரசியல் அல்லது கட்சி அரசியலில் பங்கேற்றால், அவை அரசியல் இயல்புடையதாகக் கருதப்படும்.”

இந்தப் பிரிவுகளின் கீழ் உள்ள 2011-ம் ஆண்டின் விதிமுறைகள் “அரசியல் கட்சியாக இல்லாத ஒரு அமைப்பை அரசியல் இயல்புடையதாக அறிவிப்பதற்கு சில வழிகாட்டுதல்களைக் கையாண்டன.” அதன்படி, மத்திய அரசு ஒரு அமைப்பை 6 அளவுகோல்களின் அடிப்படையில் அரசியல் இயல்புடையதாகக் குறிப்பிடலாம்.

‘அரசியல் குழு’

எஃப்சிஆர்ஏ 2011, விதி 3-ன் பிரிவு (V) “விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சாதி, சமூகம், மதம், மொழி அல்லது பிறவற்றை அடிப்படையாகக் கொண்ட குழுக்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுடன் ஈடுபடாவிட்டாலும், அரசியல் நலனுக்காகச் செயல்படுவது சான்றுகள் மூலம் உறுதியானால்” அவற்றை அரசியல் இயல்புடையதாகக் கருதுகிறது.

பிரிவு (VI-ன்) படி, “எந்தவொரு அமைப்பும் தொடர்ந்து சாலை மறியல், ரயில் மறியல், சிறை திறப்பு, பந்த் அல்லது வேலைநிறுத்தம் போன்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால்” அந்த அமைப்புகள் அரசியல் இயல்புடையதாகக் கருதப்படுகிறது.

இதில், ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது, இது பிரிவு V மற்றும் VI-ல் குறிப்பிடப்பட்டுள்ள குழுக்கள் “தீவிர அரசியல் அல்லது கட்சி அரசியலில்” பங்கேற்றால் மட்டுமே மத்திய அரசால் ஒரு அரசியல் குழுவாகக் கருதப்படும் என்று கூறுகிறது.

எஃப்சிஆர்ஏவின் படி, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் ஊடக நபர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி உதவி பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

எஃப்சிஆர்ஏ, வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் அத்தகைய பங்களிப்புகள் நாட்டின் உள்பாதுகாப்பைப் பாதிக்காது என்பதை உறுதி செய்கிறது. 1976-ம் ஆண்டில் முதன்முதலில் இயற்றப்பட்ட இந்தச் சட்டம் 2010-ம் ஆண்டில் திருத்தப்பட்டது, அப்போது வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தால் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பரில் திருத்தப்பட்டது.

வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விரும்பும் அனைத்து சங்கங்கள், குழுக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் (என்ஜிஓ) இந்தச் சட்டம் பொருந்தும்.

புதிய விதிகள் எஃப்சிஆர்ஏ பதிவுகளை மேலும் கடுமையானதாக மாற்றியுள்ளன.

தற்போது, எஃப்சிஆர்ஏவின் கீழ் பதிவு செய்துகொள்ள விரும்பும் எந்தவொரு அமைப்பும் “3 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும்” மற்றும் “கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் சமூகத்தின் நலனுக்காகக் குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் செலவழித்திருக்க வேண்டும்”. எவ்வாறாயினும், மத்திய அரசு விரும்பினால் இந்த நிபந்தனைகளைத் தள்ளுபடி செய்ய முடியும்.

திருத்தப்பட்ட விதிகள், நன்கொடையாளரிடமிருந்து பெற்ற உறுதிப்பாட்டுக் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நன்கொடை எந்த நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்