Aran Sei

பாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம் – மம்தா பானர்ஜி

credits : pti

மேற்கு வங்கத்தில் 2021-ம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்குவங்கம் சென்றிருந்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர் பொதுக்கூட்டங்களில் மம்தா பானர்ஜியையும் திரிணாமூல் காங்கிரசையும் கடுமையாக சாடியுள்ளார். பாஜக 200 தொகுதிகளுக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஏழைகள் வீட்டில் உணவருந்தும் அமித் ஷா – பிரதமரின் பழைய ட்வீட்டை பகிர்ந்து கேளிசெய்யும் திணாமுல்

திரிணாமூல் காங்கிரசின் உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததை குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, தேர்தல் ஆரம்பிக்கும் சமயத்தில் திரிணாமூல் காங்கிரசில் யாரும் இல்லாமல் மம்தா பானர்ஜி தனித்து விடப்படுவார் என தெரிவித்துள்ளார்.

“அரசியலில் தோற்றால் இப்படித்தான் எதிர்கொள்வீர்களா” – அமித் ஷாவைச் சாடும் டெல்லி துணை முதல்வர்

மேற்கு வங்கத்தில் வாடிக்கையாகி விட்ட தினசரி குண்டுவெடிப்புகளில் இருந்து பாதுகாக்க பாஜகவினால் தான் முடியும் எனவும் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்தில் செய்த சுற்றுப்பயணம் குறித்து பேசிய அவர், ”மேற்கு வங்கத்தின் முன்னோடிகள் குறித்து பாஜக படிக்க வேண்டும். அவர்களுடைய மதத்தை எங்கள் மீது திணிப்பதை அனுமதிக்க மாட்டோம். தாகூரை அபகரிக்க விடமாட்டோம், பாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம்” என மம்தா கூறியதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் அமித்ஷா பேசியது அனைத்துமே பொய்கள் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் வளர்ச்சி இல்லை என உள்துறை அமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டி பேசிய மம்தா, குறு சிறு நடுத்தர தொழிற்துறையில் மேற்கு வங்கம் முதலிடத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார். கிராமப்புரங்ளில் சாலைகள் இல்லை என அவர் வைத்த குற்றச்சாட்டுக்கு, கிராமப்புற சாலை வசதிகளிலும் மேற்கு வங்கம் முதலிடத்தில் இருப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது அனைத்தும் இந்திய அரசாங்கத்தின் தரவுகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா மீது வீசப்பட்ட பதாகை – எதிர்ப்பின் அடையாளமா?

இந்தியாவின் உள்துறை அமைச்சர், கட்சி தொண்டர்கள் தரும் தரவுகளை ஆய்வு செய்யாமல் பொய் பேசுவது அந்த பதவிக்கு மரியாதை இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசிய அவர், “இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட நாளில் இருந்தே இதை எதிர்த்து வருகிறோம். மக்களின் தலையெழுத்தை பாஜக தீர்மானிக்க கூடாது, அதை அவர்களே தீர்மானம் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு இவை அனைத்துக்கும் எதிரானது என அவர் கூறியுள்ளார்.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்ச்’ – மேற்கு வங்கத்தில் அமித் ஷா புது வியூகம்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி,  தவறான கணிப்புகளின் அரசன் எனும் தலைப்பில், உள்துறை அமைச்சரின் அனைத்து தேர்தல் பேச்சுக்களையும் தொகுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கள் அனைத்திற்கும் நாளை பதிலளிப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்