Aran Sei

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் – அஞ்சலி செலுத்தும் 1 லட்சம் கிராமங்கள்

Image Credits: The Indian Express

த்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த மூன்று வாரங்களாகப் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது 33 விவசாயிகள் உயிர் இழந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இன்று (20.12.2020) ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகள் – படங்களை ஏந்தி போராடும் தாய்மார்கள்

இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் (விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு) அழைப்பை ஏற்று ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் இரங்கல் தினம் அனுசரிக்கப்படும். நவம்பர் 26 முதல் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த இந்தத் தினம் அனுசரிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

குளிரிலும் மழையிலும் போராடும் விவசாயிகள் – கூடார நகர் உருவாக்கம்

“பதிவுகளின்படி, போராட்டத்தில் பங்கேற்ற 33 விவசாயிகள் நவம்பர் 26 முதல் விபத்துக்கள், நோய் மற்றும் மோசமான வானிலை காரணமாக இறந்துள்ளனர். டிசம்பர் 20 அன்று, விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள். இரங்கல் கூட்டங்கள், மனித சங்கிலி மற்றும் இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்தல் போன்றவற்றை கடைபிடித்து இந்தத் தினம் அனுசரிக்கப்படும்” எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் இராணுவ வீரர்கள் – புலனாய்வு அமைப்புகள் விசாரணை

சமீபத்தில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வேளாண் சட்டங்களால் நன்மை ஏற்படும் என்றும், விவசாயிகள் போராட்டம் எதிர் கட்சிகளால் தூண்டப்பட்ட ஒன்று என்றும் எழுதியுள்ளார். இதையொட்டி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நரேந்திர சிங் தோமருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பதில் அளித்துள்ளனர். அதில், “விவசாயகளின் கோரிக்கைகைகள் மீதான தாக்குதல் மூலம் அரசுக்கு விவசாயிகள் மீது உண்மை அக்கறை இல்லை என்பது தெரியவந்துள்ளது” என அவர்கள் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்