Aran Sei

கறுப்பினத்தவர்களை புறக்கணித்த கோல்டன் குளோப் அமைப்பு – விருதுகளை திருப்பியளித்த நடிகர் டாம் குருஸ்

கோல்டன் குளோப் விருதுகளை வழங்கும் ஹாலிவுட் அயலக பத்திரிகையாளர்கள் சங்கம் (HFPA), கறுப்பினத்தவர்களை முழுமையாக புறக்கணித்து வருவதாகக் கூறி, ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ் தான் வாங்கிய கோல்டன் குளோப் விருதுகளை திருப்பியளித்துள்ளார்.

விருது கமிட்டி, பன்முகத்தன்மையோடு செயல்படவில்லை என்ற சர்ச்சை எழுந்ததையடுத்து, பெரிய ஸ்டுடியோக்களும், தயாரிப்பு நிறுவனங்களும் ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்துடனான உறவைத் துண்டித்துள்ளன.

‘தமிழக முதல்வரே சூழலியலை வலுப்படுத்துங்கள்’- சமூக செயற்பாட்டாளர்கள் ஸ்டாலினுக்கு கடிதம்

இதேபோன்று, ஒன்பது முறை கோல்டன் குளோப் விருதுப் பட்டியலில் இடம்பெற்ற நடிகை ஸ்கேர்லெட் ஜோஹன்ஸீன், ஹாலிவுட் அயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக கேள்வியெழுப்பியதாக தெரிவித்துள்ளார்.

தாண்டவ் வெப் சீரிஸ் விவகாரம்: இந்து மதத்தை இழிவு செய்வதா? – நீதிபதி கடும் கண்டனம்

ஹாலிவுட் அயலக பத்திரிகையாளர்கள் சங்கம், 1943 ஆம் ஆணடு தொடங்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பு, ஹாலிவுடில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையளர்கள் மற்றும் புகைப்படக்கலைஞர்களை உறுப்பினராக கொண்டது. மேலும் 55 நாடுகளைச் சேர்ந்த 90 பேர் தற்போது இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளனர். இந்த அமைப்பு திரைப்படம், தொலைக்காட்சி ஆகிவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு கோல்டன் குளோப் என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக ஹாலிவுட் அயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தில், கறுப்பினத்தவரை சார்ந்த ஒருவர் கூட உறுப்பினராக நியமிக்கப்படாதது, அந்த சங்கத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பல திரைக்கலைஞர்கள் விருது விழாவை புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“நீங்கள் எங்கள் இதயத்தில் நிறைந்துள்ளீர் விவேக்” – அரசியல் ஆளுமைகள், திரைக்கலைஞர்கள் இரங்கல்

இதனை தொடர்ந்து, கடந்த மே 6 ஆம் தேதி, ஹாலிவுட் அயலக பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்திய கூட்டத்தில், உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் 50% உயர்த்தப்படும் என்றும், பன்முகத்தன்மை காக்கப்படும் வகையில் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Source: The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்