Aran Sei

‘மக்களுக்கு வேலை செய்யாத அதிகாரிகளை மூங்கில் குச்சியால் தாக்குங்கள்’ – பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

திகாரிகள் உங்கள் கோரிக்கைகளைக் கேட்கவில்லை என்றால், அவர்களை மூங்கில் குச்சிகள் கொண்டு தாக்குங்கள்” என்று பீகாரின் பெகுசாராய் தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

கொடவாண்டபூரில் இருக்கும் ஒரு விவசாய நிறுவனம், ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிராஜ், இவ்வாறு பேசினார். அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளைக் கேட்பதில்லை என அமைச்சர் கிரிராஜ்க்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருந்தன.

நக்சலைட் இயக்கங்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக : நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் அரசியல் பயணம்

அதைத் தொடர்ந்து பேசிய அவர், ”நான் உங்களிடம் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், இது போன்ற சிறிய விசயங்களுக்கு ஏன் என்னிடம் வருகின்றீர்கள். உங்களுக்குப் பணி செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர்கள், கிராம அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் கோரிக்கைகளைக்  கேட்கவில்லை என்றால் இரு கைகளால் மூங்கில் குச்சிகளைப் பிடித்து அவர்களின் தலையில் பலமாக தாக்குங்கள்” எனக் கூறியுள்ளார்.

”ஒருவேளை இந்த நடவடிக்கை பலன் தரவில்லை என்றால் பிறகு நான் என் அதிகாரத்தை அவர்கள்மீது செலுத்துகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, பீகார் மாநில பாஜக தலைவர், “கிரிராஜ் ஒரு வெகுஜன தலைவர், அவர் மக்களின் கோபத்திற்கு பதிலளிக்க வேண்டும். நான் அவரின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்