Aran Sei

‘பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் புகுத்தக்கூடாது’ – நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ரோமிலா தாப்பர் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கடிதம்

ன்.சி.இ.ஆர்.டி  வரலாறு பாடப்புத்தகத்தில் கொண்டு வரப்பெற்றுள்ள திருத்தங்கள், “வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் மாணவர்களைக் குழப்பக்கூடிய கருத்துகள்” இடம் பெற்றுள்ளன என்று குறிப்பிட்டு 100க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டைச் சார்ந்த வரலாற்றறிஞர்கள் கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பெகசஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியல் – ராகுல் காந்தி பெயரும் இடம்பெற்றுள்ளது

இதுகுறித்து இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள டெல்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாயா ஜான், வரலாற்றறிஞர்கள் ஜூலை 15 அன்றே தங்களது கருத்துகளைக் குழு முன் சமர்பித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளதாகவும்  அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பெகசஸ் ஸ்பைவேர் விவகாரம் அச்சமூட்டும் வகையில் உள்ளது’ – ஐநா மனித உரிமை ஆணையர் கண்டனம்

மேலும், அந்தக் குழுவிற்கு அவர்கள் எழுதியுள்ளக்  கடிதத்தில்,”வரலாற்று சம்பவங்களுக்கான பின்னுட்டங்கள்  மற்றும் தேசியத் தலைவர்கள் குறித்து பாடபுத்தகங்களில் நிலவும் குழப்பத்தை நீக்குதல்; இந்திய வரலாற்றின் அனைத்து பகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்தல்; முக்கிய பெண் தலைவர்களின் வரலாற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தல்” ஆகியவை குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும்  தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

அதுமட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை புகுத்தும் நோக்கத்துடன் பாடநூல் திருத்தம் செய்வதற்கான வேலையை மேற்கொள்ளக் கூடாது என்று  அவர்கள் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் ரோமிலா தாப்பர், முகுல் கேசவன் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், டொராண்டோ பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும்  தி இந்து செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது. 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்