ஆகஸ்ட் 28 ஆம் தேதி, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்த புதிய ஜாலியன் வாலாபாக் நினைவகம் வரலாற்றைத் திரிக்கும் செயல் என வரலாற்றாசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மூன்றரை ஆண்டு சீரமைப்பிற்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட நினைவகம் மற்றும் நான்கு புதிய காட்சியகங்களை காணொளி வாயிலாக மோடி திறந்து வைத்தார்.
ஜென்ரல் டயர் தலைமையிலான பிரிட்டீஷ் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது பாதிக்கப்பட்டவர்கள் குதித்த கிணறு வெளிப்படையான தடுப்பால் மூடப்பட்டுள்ளது. குறுகிய நுழைவு வாயில் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளை விளக்கும் தினசரி ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
இது ‘வரலாற்று திரிபு’ என தெரிவித்துள்ள வரலாற்றாசிரியரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) முன்னாள் பேராசிரியருமான சமான் லால், இந்தத் திட்டம் ’வரலாற்றைக் கவர்சிப்படுத்த மற்றும் புரியாத படி செய்ய முயற்சிக்கப்பட்டது’ என அவர் கூறியுள்ளார்.
”ஜாலியன் வாலாபாக் வரும் மக்கள் வலி மற்றும் வேதனையுடன் செல்ல வேண்டும். ஆனால், அதை இப்போது ஒரு அழகான தோட்டத்துடன் அனுமதிக்கும் இடமாக மாற்ற அவர்கள் முடிவு செய்துள்ளனர். அது ஒரு அழகான தோட்டம் அல்ல” என பேராசிரியர் லால் குறிப்பிட்டுள்ளார்.
”இந்தியர்கள் கூடியிருந்த இடத்தில், ஜெனரல் டயரும் அவரது படைகளும் நுழைந்த துரதிருஷ்ட இடமாக ஜாலியன்வாலா பாக் இருந்தது. மறுசீரமைப்புக்கு பதிலாக, அரசாங்கம் அந்த இடத்தைப் புதுப்பித்துள்ளது, புதிய அம்சங்களை சேர்த்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த கழிப்பறைகள், பார்வையாளர்களுக்கு உணவகம் ஆகியவற்றை எதிர்க்கவில்லை எனக் கூறிய வரலாற்றாசிரியர் எஸ். இர்பான் ஹபீப், ‘செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் வரலாற்றின் செலவில் பாரம்பரிய செலவில் செய்யப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
”இது முற்றிலும் அழகியலாக உள்ளது… சுவரில் ஓவியங்கள் ஏன் இருக்க வேண்டும்?. டயர் கொல்ல நுழைந்த அந்த மொத்த இடத்தின் யோசனையை மாற்றுகிறது. சிறிய தாழ்வாரத்திற்கு கவர்ச்சியை சேர்ப்பது முழுக் காட்சியின் வரலாற்றையும் மாற்றுகிறது. வரலாறு மீண்டும் எழுதப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. இது நினைவுச் சின்னங்களை கார்பரேட் மயமாக்குவதாகும்” என அவர் கூறியுள்ளார்.
”கிணறு மூடப்பட்டிருக்க கூடாது என்றும், செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தேவையற்றவை மற்றும் ஒப்பனைத்தன்மை உள்ளவை. இது மிகவும் மோசமான போக்கு” என அவர் குறிப்பிட்டார்.
’அமிர்தசரஸ் 1919 – ஒரு பயம் மற்றும் ஒரு படுகொலை தயாரித்தல்’ நூலின் ஆசிரியரும் லண்டனைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியருமான கிம்.ஏ. வாக்னர் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “தளத்தை மறுசீரமைப்பது என்பது ’நிகழ்வின் கடைசி தடயங்களை திறம்பட அழிப்பது என்று அர்த்தம்” என பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த வாமா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இத்திட்டம் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் என்பிசிசியால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள தேசிய காவல் அருங்காட்சியம், மகாத்மா காந்தி அருங்காட்சியத்தை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.