Aran Sei

‘தியாகிகள் பட்டியலில் இருந்து மாப்ளா போராட்ட தியாகிகளை நீக்குவது வரலாற்றை சிதைக்கும் முயற்சி’ – வரலாற்றாசிரியர்கள் கண்டனம்

1921ஆம் ஆண்டு நடந்த மலபார் மாப்ளா போராட்டத்துடன் தொடர்புடைய 387 தியாகிகளின் பெயர்களை இந்திய தியாகிகள் கலைக்களஞ்சியத்தின் 5வது தொகுதியில் இருந்து நீக்குவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு 30க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வரலாற்றாசிரியர்களான இர்பான் ஹபீப், கே.என்.பனிகர், ஷிரீன் மூஸ்வி, கே.சச்சிதானந்தன், அமிதா பாலிவால், பால் ஆச்சாரியா, பி.கே.சுக்லா, என்.எஸ்.மாதவன், அருண் பந்தோபாத்யாய், சசிகுமார், மிருதுளா முகர்ஜி உள்ளிட்டோர் இணைந்து எழுதியுள்ள இக்கடிதத்தில், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் முடிவானது வரலாற்றை சிதைக்கும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளனர்.

‘மாப்ளா போராட்ட தியாகிகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் நினைவு கல்வெட்டு அமைத்திடுக’ – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தல்

“ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்களின் பெயர்களை மட்டும் நீக்குவதன் வழியாக, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பங்கைக் குறைத்து காட்டவும், ஆளும் இந்துத்துவா சக்திகளின் தவறான பரப்புரைகளை நியாயப்படுத்தவும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் முயற்சிக்கிறது” என்று அக்கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலிலிருந்து அலி முஸ்லியார் மற்றும் வரியம்குன்னாத்து ஆகியோரின் பெயர்களை நீக்குவதற்கான தனது முடிவை ஒத்திவைப்பதாக ஒன்றிய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்திருக்கும் இச்சூழலில்,  வரலாற்றாசிரியர்களால் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Source: Times of India

தொடர்புடைய பதிவுகள்: 

மாப்ளா போராட்ட வரலாறும் ஒன்றிய அரசின் வரலாற்று இருட்டடிப்பும் – பகுதி 1

மாப்ளா போராட்ட வரலாறும் ஒன்றிய அரசின் வரலாற்று இருட்டடிப்பும் – பகுதி 2

மாப்ளா போராட்டமும் சில குறிப்புகளும் – பகுதி 3

மாப்ளா போராட்ட வரலாறும் ஒன்றிய அரசின் வரலாற்று இருட்டடிப்பும் – பகுதி 4

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்